வி.மணிவண்ணனை மாநகரசபை உறுப்பினராக்கியமை தவறு – மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு

0
656
tamilnews VManiwannan Jaffna municipal council not live territory

(tamilnews VManiwannan Jaffna municipal council not live territory)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் யாழ். மாநகர சபை எல்லைக்குள் வசிக்கவில்லை.

அவரை மாநகரசபை உறுப்பினராக்கியமை தவறு என சுட்டிக்காட்டி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தெரிவத்தாட்சி அலுவலர் உட்பட்டோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் மணிவண்ணன் நிரந்தரமாக வசிக்கவில்லை என் குறிப்பிட்டுள்ள மனுதாரர் தரப்பு நிரந்தரமாக வசிக்காத ஒருவர் உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டமை உள்ளூராட்சி தேர்தல் விதியை மீறும் செயல் என மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கி கட்டளையிட வேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார்.

இந்தநிலையில் ஆவலுடன் எதிர்பார்த்தது போன்று எனது மாநகர சபை உறுப்புரிமையை நீக்க கோரி எனக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.

புயலாக எழுகின்ற எத்தகைய சவால்களையும் மலையாக நின்று எதிர்கொள்ள நான் தயார்.

என்னை வெளியேற்ற துடிக்கும் எனது நண்பர்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள் என்று யாழ். மாநகர சபை உறுப்பினரான சட்டத்தரணி மணிவண்ணன் தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

(tamilnews VManiwannan Jaffna municipal council not live territory)

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :