ஸ்தம்பிக்குமா பாடசாலைகள்? : அகில இலங்கை அதிபர், ஆசிரியர்கள் விடுமுறையில்…

0
663
Principals teachers union strike Sri Lanka news Tamil

அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று அகில இலங்கை ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரிய சங்கம் தெரிவித்துள்ளது. Principals teachers union strike Sri Lanka news Tamil

குறித்த விடயத்தினை இலங்கை ஆசிரிய சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் மற்றும் அதிபர் நியமனங்களில் இடம்பெறும் அரசியல் தலையீடுகளை நிறுத்த வேண்டும் என அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.

இதுதொடர்பில் நேற்றைய தினம் பிரதமர் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த காரணத்தினால், இன்று போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பிரதமர் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் பேச்சுவார்த்தையின் போது, குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துவதாக தெரிவித்தாலும், நிரந்தர தீர்மானமொன்றுக்கு வரவில்லை என்பதால், இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதன்படி அனைத்து பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களையும், சுகயீன விடுமுறையில் இருக்குமாறு குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகைத்தர மாட்டார்கள் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அதிபர்கள் இன்றைய தினம் பாடசாலைக்கு செல்லவேண்டாம் என இலங்கை தேசிய அதிபர் சங்கத்தின் தலைவர் பராக்கிரம வீரசிங்க அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இணைந்த ஆசிரியர் சேவை சங்கம், லங்கா ஆசிரியர் சேவைகள் சங்கம், இலங்கை தேசிய அதிபர் சங்கம் என்பன வேலைநிறுத்தப் போராட்டத்தில் இணைந்துள்ளன.

எவ்வாறாயினும் இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சின் செயலாளர் கல்ப குணரத்ன,

“போராட்டத்தில் ஈடுபடுவது அவர்களது உரிமை. ஆனால் சங்கத்தில் இணைக்கப்படாத அல்லது இன்று பாடசாலைக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு எந்த சங்கங்களும் எச்சரிக்கை விடுக்க முடியாது. இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்படுமானால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் அரசாங்க பாடசாலைகள் அனைத்தும் இன்று வழமைப்போல இயங்கும்” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Principals teachers union strike Sri Lanka news Tamil,Principals teachers union strike Sri Lanka news Tamil