18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு! – சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

0
1033
18MLAs disqualification case-trial chennai high court today

18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தகுதி நீக்கம் செல்லும் என்றும், மற்றொரு நீதிபதியான சுந்தர் செல்லாது எனவும், கடந்தமாதம் 14-ஆம் தேதி தீர்ப்பளித்தனர். இதனால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இதனை விசாரிக்க நீதிபதி எஸ்.விமலா பரிந்துரை செய்யப்பட்டார்.18MLAs disqualification case-chennai high court today

இதனிடையே, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அரசு வழக்கறிஞரின் உறவினரான நீதிபதி எஸ்.விமலா விசாரிக்கக்கூடாது என்றும் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை சென்னை உயர் நீதிமன்றம்தான் விசாரிக்கும் எனவும் நீதிபதி சத்தியநாராயணன் வழக்கை விசாரிப்பார் எனவும் கடந்த 27 ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுவரை விசாரணைக்காக பட்டியலிடப்படாததால், டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் உயர்நீதிமன்ற பதிவாளர் சக்திவேலிடம் ஒரு கடிதம் கொடுத்தார்.

அதில், தகுதிநீக்க வழக்கை, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் விரைந்து பட்டியலிட வேண்டும் என கோரியிருந்தார். கடந்த ஒன்பது மாதங்களாக 18 தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருப்பதாகவும் எனவே வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த கடிதத்தை கொடுத்துள்ளதாக ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்திருந்தார்.

இதனால், இந்த வழக்கு நீதிபதி சத்திய நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :