இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

0
465
இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

இன்று!
விளம்பி வருடம், ஆனி மாதம் 19ம் தேதி, ஷவ்வால் 18ம் தேதி,
3.7.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி இரவு 7:49 வரை;
அதன்பின் சஷ்டி திதி, சதயம் நட்சத்திரம் இரவு 1:08 வரை;
அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பூசம்,ஆயில்யம்
பொது : முருகன், துர்க்கை வழிபாடு.

.

மேஷம்:

தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்

 

ரிஷபம்:

பேச்சு, செயலில் உற்சாகம் வெளிப்படும். தொழில், வியாபார வளர்ச்சியால் ஆதாயம் உயரும். பிள்ளைகளின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசு வகையில் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகள் நற்செயலில் ஈடுபட்டு புகழ் பெறுவர்..

மிதுனம்:

மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். உடல்நலனில் அக்கறை தேவை. பிள்ளைகளின் செயல்பாடு நிம்மதியளிக்கும்.

கடகம்:

சிலர் உங்களிடம் உதவி கேட்டு அணுகுவர். தொழில், வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

சிம்மம்:

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செயலில் நேர்த்தியும் வசீகரமும் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.

கன்னி:

குடும்பத்தினர் ஆதரவு வளர்ச்சிக்கு துணைநிற்கும். தொழில்,வியாபாரத்தில் இருக்கிற அனுகூலத்தைப் பாதுகாப்பது நல்லது. லாபம் சுமார். பெண்கள் அதிகம் பயன் தராத பொருள் வாங்க வேண்டாம். அரசுவகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.

துலாம்:

மனதில் நேர்மை நிறைந்திருக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பெண்கள் வெகுநாள் விரும்பிய பொருள் வாங்குவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி பற்றி பேச்சு நடந்தேறும்.

விருச்சிகம்:

திட்டமிட்ட பணிகளில் கவனம் கொள்வது நல்லது. தொழில் வியாபார நடைமுறை மந்தகதியில் இயங்கும். லாபம் சுமாராக இருக்கும். உறவினர் வகையில் செலவு செய்ய நேரிடும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.

தனுசு:

குடும்பத்தினர் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் குறுக்கிடும் இடையூறை உடனுக்குடன் சரி செய்வது நல்லது. லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். வாகனப் பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம்:

நண்பர் மத்தியில் செல்வாக்கு உயரும். தொழில், வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும். பணியாளர்கள் அதிகாரிகளின் மத்தியில் நற்பெயர் காண்பர். பெண்கள் ஆடம்பரச் செலவை தவிர்ப்பது நல்லது.

கும்பம்:

மற்றவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். தொழில், வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பெண்களுக்கு நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்…

மீனம்:

அனுபவசாலிகளின் அறிவுரையை ஏற்று நடப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். லாபம் பெருகும். உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்