அடுத்த வருடத்துக்குள் 200 பில்லியன் ரூபா அபிவிருத்திகள்! ரணில் உறுதி!

0
444
Sri Lanka 200 Billion Development Prime Minister Ranil Confirmed

அடுத்த வருட இறுதிக்குள் 160 முதல் 200 பில்லியன் ரூபா வரை பெறுமதிகொண்ட அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Sri Lanka 200 Billion Development Prime Minister Ranil Confirmed

மேலும் அடுத்த வரும் மூன்று – நான்கு வருடங்களில் நாட்டின் பொருளாதாரம் கணிசமான வளர்ச்சி அடையும் என்றும் அதன்பின்னர் நாட்டு மக்களுக்கு விசேட சலுகைகளும் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

கண்டி பன்னில கெலேபொக்க அரச பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரதேசத்தில் காணி உறுதிப் பத்திரங்களை கையளிக்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.

இந்த நிகழ்வின் போது தலா ஏழு பேர்ச் நிலப்பரப்பை கொண்ட காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களும் தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

2015ம் ஆண்டு மோசமான நிலையில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை கிரமமான முறையில் விருத்தி அடையச் செய்வது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

நாட்டில் துரிதகதியில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க தாம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் அடுத்த வருட இறுதிக்குள் 160 முதல் 200 பில்லியன் ரூபா வரை பெறுமதிகொண்ட அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்த பிரதமர் அடுத்த வரும் மூன்று – நான்கு வருடங்களில் நாட்டின் பொருளாதாரம் கணிசமான வளர்ச்சி அடையும் என்றும் அதன்பின்னர் நாட்டு மக்களுக்கு விசேட சலுகைகளும் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :