மஹிந்தவை மீண்டும் கொட்டிய தேள்!

0
749

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது செய்தி ஆக்கம் மீது பிரச்சினை இருந்தால் தமது செய்தி ஆசியர்களை தொடர்புகொள்ள முடியுமென நிவ்யோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. New York Times Article

மஹிந்த ராஜபக்ஷ சீனாவிடமிருந்து தனது தேர்தல் செலவுகளுக்காக நிதிபெற்றுக்கொண்டதாக நிவ்யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

குறித்த செய்தி ஆக்கம் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இச்செய்தி அறிக்கைக்கு பங்களிப்புச் செய்த ஊடகவியலாளர்கள் இருவருக்கு முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று விமர்சனம் செய்துள்ளதாக நிவ்யோர்க் டைம்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

நிவ்யோர்க் டைம்ஸ் சார்பில், டைம்ஸ் இண்டர்நேஷனலின் ஆசிரியர் மைக்கல் ஸ்லெக்மேன் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பில் நிவ்யோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் , குறித்த செய்தியாக்கம் தொடர்பில் எதுவும் பிரச்சினை இருந்தால் , தமது சிரேஷ்ட ஆசிரியர்களுடன் தொடர்புகொள்வதை தாம் ஊக்குவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களை இவ்வாறு அச்சுறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், இது விமர்சனம் செய்வோரை அமைதியாக்கும் மற்றும் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையென்பதுடன் பொதுநலன் சார்ந்த தகவல்களை இலங்கையர்கள் பெறுவதை தடுக்கும் நடவடிக்கையெனவும் நிவ்யோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிகாரிகள் , ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள் என தாம் நம்புவதாகவும் மைக்கல் ஸ்லெக்மேன் குறிப்பிட்டுள்ளார்.

நிவ்யோர்க் டைம்ஸ் வெளியிட்ட செய்திக்கு மஹிந்த தரப்பினர் தொடர்ச்சியாக கண்டனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.