லிபியாவிலிருந்து ஐரோப்பா சென்ற 103 அகதிகள் மரணம் : ஐ.நா. அனுதாபம்

0
732
Libya boat tragedy Boat sink UN condolence tamilnews

(Libya boat tragedy Boat sink UN condolence tamilnews)
லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற படகொன்று விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உள்பட 103 அகதிகள் பலியான அனர்த்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான லிபியாவில் இருந்து கடந்த 29 ஆம் திகதி 123 அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் நோக்கில் ஒரு ரப்பர் படகில் மத்திய தரைக்கடல் வழியாக பயணம் செய்தனர்.

அவர்களுடைய படகு தஜோரா கடற்கரையோரம் சென்ற போது திடீரென படகுக்குள் நீர் புகுந்து அது கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் படகில் இருந்த 70 ஆண்கள், 30 பெண்கள், 3 குழந்தைகள் என 103 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

சிறிய படகில் அதிகமானோர் பயணம் செய்தமையும், கடல் சீற்றமும் விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இந்த தகவலை உறுதி செய்த ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில், “இந்த துயர சம்பவம் வேதனை அளிக்கிறது.

இதற்காக ஆழ்ந்த அனுதாபங்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

படகு விபத்தில் உயிர் தப்பிய ஒருவர் கூறுகையில், “எனது வாழ்க்கையில் இது மிகவும் கடினமான நாள். என்னைக் காப்பாற்றிக்கொள்வதா? அல்லது எனது குழந்தைகள், நண்பர்களை காப்பாற்றுவதா? என்பது தெரியாமல் பரிதவிப்புக்கு உள்ளாகிவிட்டேன்” என்றார் அவர்.

(Libya boat tragedy Boat sink UN condolence tamilnews)

#Libyaboattragedy #Boatsink #tamilnews

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :