விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் : விஜயகலா அறைகூவல் (UPDATE 1)

0
1088

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் பேரெழிச்சியுடன் உருவாக வேண்டும் என்று இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் அறைகூவல் விடுத்துள்ளார். (Vijayakala Maheswaran)

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வொன்றில் கருத்துரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வட மாகாணங்களில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் தொடர்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும். அப்போதுதான் மக்கள் நின்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழலாம்.

மேற்கண்டவாறு இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கூறியுள்ளார். ஜனா திபதியின் மக்கள் சேவை திட்டத்தின் 8வது தேசிய நிகழ்ச்சி திட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்தநிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது அமைச்சர் மேலும் கூறுகையில்,

தலையால் நடந்தே ஜனாதிபதியை நாங்கள் தேர்வு செய்தோம். ஆனால் ஜனாதிபதி எங்களுக்கு என்ன செய்தார்?

தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் நாங்கள் எப்படியான வாழ்க்கை வாழ்ந்தோம் என்பது எங்கள் அனைவருக்குமே தெரியும்.

எனவே வடகிழக்கு மாகாணங்களில் மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமானால், எங்களுடைய பிள்ளைகள் நிம்மதியாக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்ப வேண்டுமாக இருந்தால்.

தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் வடகிழக்கு மாகாணங்களில் ஓங்கவேண்டும். தமிழீழ விடுதலை புலிகளை வடகிழக்கு மாகாணங்களில் உருவாக்க வேண்டும்.

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பாடசாலை சிறுமி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இதனை தடுப்பதற்கு இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது ஒன்றுமில்லை.
சில காணிகளை மக்களிடம் மீளவும் கொடுத்ததை தவிர இந்த அரசாங்கம் ஒன்றுமே செய்யவில்லை.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் தகவலின் படி யாழ். மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

அவர்களுக்கு இந்த அரசாங்கம் என்ன செய்திருக்கிறது?

வடகிழக்கில் 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகளையும் கூட வழங்கவேண்டாம் என ஜனாதிபதி தடுக்கிறார்.
மண்ணின் விடுதலைக்காக ஆயுதங்களை ஏந்தி போராடியதற்காக

முன்னாள் போராளிகள் மனிதர்கள் இல்லையா? எதற்காக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகளை கிடைக்கவிடாது ஜனாதிபதி தடுக்கிறார் என்றால் அவர் தெற்கில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக மட்டுமே.

அதேபோல், முன்னய ஆட்சியாளர்கள் வடகிழக்கு மக்களுக்கு என்ன செய்தார்களோ அதனையே ஒரு மாற்றமும் இல்லாமல் இந்த ஆட்சியாளர்களும் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றார்.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Vijayakala Maheswaran,Vijayakala Maheswaran,Vijayakala Maheswaran,