ஒ.பன்னீர்செல்வத்தை இலங்கை வருமாறு அழைத்த வே.இராதாகிருஸ்ணன்…

0
613
Velusami Radhakrishnan meet Panneerselvam

கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணயின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், தமிழ்நாட்டின் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, இந்தியா சென்றுள்ளார்.

இதில் நேற்றைய தினம் ஒ.பன்னீர்செல்வத்தை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு அரசாங்கம் இலங்கை கல்வி அமைச்சிற்கு வழங்கவுள்ள ஒரு இலட்சம் புத்தகத்திற்கு நன்றி தெரிவித்ததுடன், மலையக மக்களின் கல்வி அபிவிருத்திக்கு அதிகமான பங்களிப்பை செய்ய தமிழ்நாடு அரசாங்கம் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

அத்துடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கையில் மாத்தளையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர்.102வது ஆண்டுவிழாவில் துணை முதல்வரை கலந்து கொள்ளுமாறு அழைப்புவிடுத்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Velusami Radhakrishnan meet Panneerselvam,Velusami Radhakrishnan meet Panneerselvam,Velusami Radhakrishnan meet Panneerselvam