வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள, வன்முறைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுத்து, நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். North Provincial Council Chief Minister Writes Letter President Maithri

‘வடக்கில் அண்மைக்காலமாக ‍போதைப்பொருள் பாவனையும், வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

எனவே பணியில், உள்ள மூத்த உதவி காவல்துறை மாஅதிபர் அல்லது ஓய்வுபெற்ற மூத்த உதவி காவல்துறை மாஅதிபரின் தலைமையில், வட மாகாண சபை அலுவலர்களை உள்ளடக்கி, வன்முறை, போதைப் பொருள் விநியோகம் ஆகியவற்றை ஆராய்ந்து- அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று இந்தக் கடிதத்தில் அவர் கோரியுள்ளார்.

அத்துடன், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி, ஆனந்த சுதாகரனை அவரது பிள்ளைகள் இலகுவாக சந்திக்கக் கூடிய வகையில், அவர்களின் இருப்பிடத்துக்கு அருகாக உள்ள சிறைச்சாலை ஒன்றுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறும், சிறிலங்கா அதிபரிடம், முதலமைச்சர் கோரியுள்ளார்.

மேலும், வட மாகாண சபையின்ன முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதி இன்னமும் வழங்கப்படாமல் இருப்பதையும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை