தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய சுதந்திர கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பொழுதுள்ள எதிர்க்கட்சியில் உள்ளனர். Maiththri Helps Mahinda Rajapaksa Become Prime Minister

இந்நிலையில் , ஜனாதிபதி மைத்திரிபால மூலமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அடுத்த தேர்தலுக்கு முன் பிரதமராக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரெரா தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ள கருத்துக்களின் பிரகாரம்,

எதிர்கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 80 ஆக அதிகரிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். இதன் மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று அரசாங்கத்தை நலிவடைய செய்யவுள்ளோம்.

அதுமட்டுமன்றி , எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரிக்கும் வேட்பாளரை நாமும் ஆதரிக்கவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை