மஹிந்த சீனாவிடம் கடன் பெற்றது இராஜதந்திரமே என்கிறார் கோத்தா

0
452
gotabaya rajapaksa china

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனாவிடமிருந்து கடன் பெற்றது ஒரு இராஜதந்திரமே என்று முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(gotabaya rajapaksa china )

மாத்தளையில் நடந்த, கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

“மீண்டும், மஹிந்த உருவானால், தற்போதுள்ள ஜனநாயகம் அழிக்கப்படும் என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால், 1948 ஆம் ஆண்டு தொடக்கம், எந்த தலைவர்களும் நாட்டில் உறுதியான ஜனநாயகத்தை தோற்றுவிக்கவில்லை.

30 ஆண்டுகளாக நிலவிய போருக்கு முடிவுகட்டி, பயங்கரவாதத்தை முற்றாக அழித்து நாட்டை ஒன்றுபடுத்தியவர், மீண்டும் அந்த கொடிய யுகத்தினை ஏற்படுத்தமாட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ அனைத்துலக கடன் நிறுவனங்களிடமிருந்து கடன் பெறாமல் சீனாவிடமிருந்து கடன் பெற்றது ஒரு இராஜதந்திரமே.

ஏனென்றால், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெற்றால் அவர்களின் தேவைக்கு ஏற்ப நாம் செயற்பட வேண்டி இருக்கும். மேலும் குறித்த நிறுவனத்திடமிருந்து கடன் பெற்றால் அதன் அழுத்தங்களின் மத்தியிலே அரசாங்கத்தை முன்னெடுத்து செல்ல வேண்டியிருக்கும்.

இதன் காரணமாகவே, தற்போதைய அரசாங்கம் இன்று அனைத்துலக நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:gotabaya rajapaksa china ,gotabaya rajapaksa china ,gotabaya rajapaksa china ,