இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய வகை எரிபொருள்!

0
532
Euro 4 petrol Sri Lanka news Tamil

இலங்கை எரிபொருள் சந்தையில் அறிமுகப்படுதப்படவிருந்த யூரோ 4 தரத்திலான புதிய பெற்றோல் மற்றும் டீசல் விநியோகம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பெற்றோலியத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க யூரோ 4 தரத்திலான எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்து வைத்தார்.

இலங்கையில் வழங்கப்பட்டு வந்த 95 ஒக்டெய்ன் பெற்றோல் மற்றும் டீசலுக்கு பதிலாக யூரோ 4 தரத்திலான பெற்றோல் மற்றும் டீசல் வழங்கப்படவுள்ளது.

இதனால் இனிவரும் காலங்களில் ஒக்டெய்ன் 95 பெற்றோல் மற்றும் டீசல் என்பன விநியோகிக்கப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

யூரோ 4 டீசலை பயன்படுத்துவதன் மூலம் வாகனங்களில் இருந்து அதிக புகை வெளியாவதை கட்டுப்படுத்த முடியும் என பெற்றோலியத்துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் யூரோ 4 எரிபொருள் ஒரு வாரத்துக்குள் நாட்டின் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

euro 4 petrol Sri Lanka news Tamil,euro 4 petrol Sri Lanka news Tamil,euro 4 petrol Sri Lanka news Tamil