Categories: Head LineINDIA

கூடங்குளம் அணுஉலையை மூட உத்தரவிட முடியாது! – உச்ச நீதிமன்றம்!

பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கில் ‘கூடங்குளம் அணுஉலையை மூட உத்தரவிட முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.can’t order close koodankulam nuclear reactor! – Supreme Court!

கூடங்குளம் அணுஉலையில் உற்பத்தியாகும் அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதற்கான உரிய தொழில்நுட்பம் இல்லை. எனவே, அதுவரை கூடங்குளம் அணுஉலை செயல்பாட்டை நிறுத்த வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘உரிய அணுக்கழிவு சேமிப்பு கிடங்கோ அல்லது கழிவுகளை அகற்றும் வசதியோ இல்லாமல் அணு உலை இயங்கிவருகிறது. அதனால், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளம் அழிந்துவருகிறது’ என்றார்.

இதைத்தொடர்ந்து வாதிட்ட மத்திய அரசின் வழக்கறிஞர், ‘அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கு அமைக்க 4 ஆண்டுகள் கால அவகாசம் தேவை’ என்றார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கை உடனே கட்டுவது என்பது ஆபத்தில் முடியும். அணுஉலை அமைப்பதற்கு 4 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதுவரையில் அணுஉலையின் செயல்பாட்டுக்குத் தடைவிதிக்க முடியாது’ என்று உத்தரவிட்டனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Share
Published by
Sakthi Raj
Tags: can't order close koodankulam nuclear reactor! - Supreme Court!koodangulamkudangulamnuclear factory

Recent Posts

உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..!

பீபாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை குரோஷியா நாட்டின் லுகா மாட்ரிச் வென்று சாதனைப் படைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்து உலகில் ரொனால்டோவும், மெஸ்ஸியும் ஆதிக்கம்…

2 mins ago

திரையில் நடிகனாக தோன்றும் தளபதி மகன்

இளைய தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் நடிகராக களம் இறங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகி  உள்ளது. Ilayathalapathy Vijay son acting short movie அந்த வகையில்…

4 mins ago

இந்திய இராணுவத்தில் மதவாதமோ, அரசியலோ கலக்கக்கூடாது; மன்மோகன் சிங்

இந்திய இராணுவத்தில் மதவாதமோ, அரசியலோ கலக்கக்கூடாது என முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். (Forces remain uncontaminated sectarian appeal)…

11 mins ago

டெல்லியில் கொடூரம் நண்பியை கொலை செய்து வீசிய நபர் கைது

தனது நண்பி வேறொருவருடன் பேசி பழகுவதை அறிந்த நபர், அந்த பெண்ணை கொலை செய்து உடலை துண்டு துண்டுகளாக வெட்டி வீசிய கொடூரம் டெல்லியில் இடம்பெற்றுள்ளது. (Chopped…

36 mins ago

பிக்பாஸ் ஆரவ்வுடைய ஜோடி ஒரு மாடல் அழகியாம்

கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று, ஆரவ் கதாநாயகனாக நடிக்கும் `ராஜ பீமா' படத்தின் போஸ்டர் வெளியானது. இந்த படத்தை நரேஷ் சம்பத் இயக்குகிறார். Big Boss Aarav pair model beauty இப்…

46 mins ago

திலீபனின் அகிம்சை தியாகத்தின் எல்லையை மீறிய நாள் இன்று!

இலங்கையில் ஈழப்போர் முளைவிடத்தொடங்கிய காலப்பகுதியில் , அமைதியை நிலை நாட்டுகிறோம் என்னும் போர்வையில் எமது தாயக்கப்பரப்பில் நுழைந்த இந்திய அமைதிப்படையின் முன்னால், ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து…

58 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.