நன் ஸ்டிக் பாத்திரத்தால் புற்றுநோயா? ஆபத்தின் விளிம்பில் மக்கள்

0
396
Cancer Danger non stick Cooking utensil

சமையல்களுக்கு உபயோகிக்கப்படும் பாத்திரங்கள் (நன் ஸ்டிக்) தகடுகளில் உள்ள இரசாயனப் பொருட்கள் குடிநீருடன் கலப்பதுடன், புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (Cancer Danger non stick Cooking utensil)

வொஷிங்டன் நகரை அடித்தளமாகக் கொண்டு செயற்படும் சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனம் ஒன்றில் நடத்தப்பட்ட பரிசோதனையின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சமையல் பாத்திரங்களில் (நன் ஸ்டிக்) உள்ள மிகச் சிறிய துகள்கள், நீர் எதிர்ப்பு துணிக்கைளும் அவற்றிலுள்ள இரசாயனங்களும் உணவுடன் சேர்க்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரசாயன பொருளை பீ.எப்.ஓ.ஏ (P.F.O.A) என அழைக்கப்படுகின்றதோடு, இவை புற்றுநோய்களுக்கு தொடர்புடையவை என்றும் இதற்கு முன்னரான ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த இரசாயனப் பொருட்களினால் (high cholesterol) அதிக கொழுப்புச்சத்து ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளதாகவும் மற்றும் நோய் தடுப்பு அமைப்பின் செயற்பாட்டை பலவீனமடைய செய்வதாகவும் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் உணவு வகைகள் தொகுப்பின் போது உபயோகிக்கப்படும் பொருட்கள் மூன்றில் ஒன்றின் மேலே குறிப்பிட்ட இரசாயன பொருட்கள் உள்ளடங்குவதாக முன்பு நடத்தப்பட்ட ஆய்வில் வெளிவந்துள்ளது.

என்றாலும், இந்தப் பாவனைப் பொருட்களின் உற்பத்தியாளர்கள் இந்த கூற்றை நிராகரித்துள்ளனர்.

அத்துடன், உணவுப் பொருட்கள் தொகுப்பின் போது உயர்தரமான பொருட்களே உபயோகிக்கப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Cancer Danger non stick Cooking utensil