புதன்கிழமையுடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுத்தப்படும் அபாயம்..!

0
899
Fuel supplies cut CPC warns sri lankan airlines

இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கான எரிபொருள் விநியோகத்தை எதிர்வரும் புதன்கிழமையுடன் நிறுத்தவுள்ளதாக, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது.(Fuel supplies cut CPC warns sri lankan airlines)

தமக்கு செலுத்த வேண்டிய சுமார் 14 பில்லியன் ரூபாவில் குறைந்தபட்சம், 1 பில்லியன் ரூபாவை குறித்த காலக்கெடுவுக்குள் வழங்கத் தவறினால், எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.

இதுதொடர்பான முடிவை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், சிவில் விமான, போக்குவரத்து அமைச்சு, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றுக்கும் அறிவித்துள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இந்த முடிவு குறித்து, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், இந்த முடிவினால், விமான சேவைகள் நிறுத்தப்படும் ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை 14 பில்லியன் ரூபாவையும், மின்சார சபை 46 பில்லியன் ரூபாவையும் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags:Fuel supplies cut CPC warns sri lankan airlines,Fuel supplies cut CPC warns sri lankan airlines,Fuel supplies cut CPC warns sri lankan airlines