கள்ளக்காதலிக்காக அக்காவிற்கு துரோகம் செய்த தம்பி!!

0
456
brother thief take sister money latest galle Tamil news

சகோதரியின் வங்கி கணக்கிலிருந்து சகோதரன் ஒருவர் கள்ளக் காதலிக்கு பணத்தை மீட்டுக்கொடுத்த சம்பவம் ஒன்று காலியில் இடம்பெற்றுள்ளது. brother thief take sister money latest galle Tamil news

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சகோதரி வழமை போன்று வங்கி கணக்கு புத்தகத்தினை தனது அறையின் மேசையின் மீது வைப்பது வழக்கம்.

இதனை அவதானித்த குறித்த சகோதரியின் சகோதரன் அக்கா வீட்டில் இல்லாத சமயத்தில் வங்கி கணக்கு புத்தகத்தினையும் அக்காவின் தேசிய அடையாள அட்டையினையும் எடுத்துச் சென்று தனது கள்ளக் காதலியிடம் கொடுத்துள்ளார்.

காலி நகரில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் காதலியிடம் அக்காவின் தேசிய அடையாள அட்டையினை கொடுத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதன் பின்னர் வங்கிப்புத்தகம் வைக்கப்பட்டிருந்த இடத்திலேயே மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.

சகோதரனால் பணம் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பில் சிறிதேனும் அறிந்திராத அக்கா மறுதினம் தேவை ஒன்றின் நிமித்தம் வங்கிக்கு சென்று பணம் மீளப்பெறுவதற்கான படிவத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளார்.

இதன்போதே நேற்றைய தினம் குறித்த வங்கி கணக்கில் 85 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பற்றுசீட்டினையும் வங்கி அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், சகோதரி பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் குறித்த சகோதரியின் சகோதரனை விசாரணை செய்ய முயற்சித்த போது அவர் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் சி சி ரீ பாதுகாப்பு புகைப்பட கருவியின் உதவியுடன் சகோதரனின் கள்ளக்காதலியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- brother thief take sister money latest galle Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites