சமையல் எரிவாயு குறைப்பு; இன்று நள்ளிரவு முதல் அமுல்

0
356
cooking gas price formula introduction government take action

சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 130 ரூபாவால் குறைப்பதற்கு வாழ்க்கை செலவுக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது. (reduction price cooking gas Rs130)

வாழ்க்கை செலவு தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில் எரிவாயுவின் விலையை குறைப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், இதுதொடர்பில் நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகார சபைக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை குறைந்துள்ளமையினால் இந்த சலுகையை மக்களுக்கு கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால் சமையல் எரிவாயுவின் விலை விரைவில் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.

கடந்த மே மாதம் முதல் 12.5 கிலோவுடைய எரி வாயுவின் விலை 245 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதனால் கொழும்பில் எரிவாயு சிலிண்டரின் விலை 1,676 ரூபாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags :- reduction price cooking gas Rs130

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites