Categories: INDIA

​ஃபார்மாலிடிஹைட் நச்சுக்காற்றை சுவாசிக்கிறதா இந்தியா?

இந்தியா முழுவதும் ஃபார்மால்டிஹைட் எனும் நச்சுத்தன்மை கொண்ட வாயு நிறைந்திருப்பதாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஓன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.india breathtaking bite formaldehyde?

இது குறித்து, இதய நோய், புற்றுநோய், ஆஸ்துமா போன்ற நோய்கள் இந்தியாவில் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணமாக காற்று மாசு பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியா மேல் பரவி இருக்கும் காற்றில் உள்ள மாசு குறித்த அதிர்ச்சி புகைப்படம் ஒன்றை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா முழுவதும் நச்சுத்தன்மை வாய்ந்த ஃபார்மாலிடிஹைட் எனும் வாயு நிறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

வளிமண்டலத்தில் பெரும்பாலும் நைட்ரஜன் மற்றும் மனிதர்கள் சுவாசிக்கும் ஆக்சிஜன் வாயுக்கள் தான் அதிகம் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடுகையில் ஃபார்மால்டிஹைட்டின் அளவு மிகவும் குறைவானதே, எனினும் சிறிய அளவு என இதை கண்டுகொள்ளாமல் இருந்துவிட முடியாது என்றும், ஃபார்மால்டிஹைட்டினால் ஏற்படும் விளைவுகள் ஆபத்தானவை என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

தாவரங்கள், காற்று மாசு, காட்டுத்தீ போன்றவற்றால் உருவாகும் ஃபார்மால்டிஹைட் வாயுவினால், கண்கள், மூச்சக்குழாயில் எரிச்சல் ஏற்படும். மேலும் ஆஸ்துமா போன்ற சுவாசம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவிலுள்ள கிராமப்புறங்களில் சமையலுக்காக எறிக்கப்படும் விறகுகள், அறுவடை முடிந்தவுடன விவசாய நிலங்களை எறிப்பதன் மூலமாக அதிகளவில் காற்றில் ஃபார்மால்டிஹைட் பரவுவதாக கூறப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு அதிகரிக்கும் காற்று மாசை கண்காணிப்பதற்காக, செயற்கை கோள் மூலம் தரவுகளை சேகரித்து அதனை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக, மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ஒரு எச்சரிக்கை மணியாகவே பார்க்க வேண்டியுள்ளது. ஃபார்மால்டிஹைட்டின் அளவு காற்றில் மேலும் அதிகரித்தால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அதிகரிக்கும் உயிரிழப்புகள், அதிர்ச்சி தரும் செயற்கைகோள் தரவுகள் என அனைத்து காற்று மாசை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு இருப்பதை உரக்க சுட்டிக்காட்டுகிறது. இந்த பிரச்னையை அவசரகதியாக அணுகி, உடனடியாக தேவையான நடவடிக்கைகளை அரசு அமல்படுத்தினால் தான் இதற்கான தீர்வை நோக்கி பயணிக்க முடியும்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Share
Published by
Sakthi Raj
Tags: Indiaindia breathtaking bite formaldehyde?india Toxicity

Recent Posts

காணாமல் போன கிழக்கு பல்கலை பெண் விரிவுரையாளரின் சடலம் மீட்பு! (Update 1)

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் பணியாற்றும் பெண் விரிவுரையாளர் ஒருவர் திருகோணமலை நகர கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Eastern University Female Lecturer Body Found Today Tamil…

14 mins ago

காதலரை பிரிந்த இந்த நாயகி இப்பிடி ஆகிடாரே…!

பாலிவுட் நடிகை திஷா பதானி ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து, உடல் எடையை குறைத்த பிறகு, பிகினியுடன் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு இளைஞர்களை சூடேற்றி…

12 hours ago

பிக்பாஸை வெளுத்தெடுத்த இந்த சரவணன் மீனாட்சி!

பிக்பாஸில் கடந்த வாரம் மும்தாஜ் வெளியேறினார். அவரது வெளியேற்றத்தின் பின்னர் பல பிரபலங்கள் மும்தாஜ் தொடர்பாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சரவணன்-மீனாட்சி புகழ் ஸ்ரீஜா,…

12 hours ago

39 வயசுலயும் சிக் என இருக்கும் இந்த அழகிக்கு இது தேவையா???

பாலிவுட்டின் முன்னணி நாயகி கரீனா கபூர் திருமணம் முடிந்து கூட தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார், இவர் படுக்கையறை காட்சி, முத்தக்காட்சி என எதிலுமே தயங்காமல்…

13 hours ago

பிக்பாஸ் ஐஸ்வர்யாவின் காதலன் இவர் தான்… உண்மையை போட்டுடைத்த பிக்பாஸ் பிரபலம்…!

இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் டாஸ்க்குகள் மிகவும் கடுமையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடைபெறுகின்ற டாஸ்க்கில் கூட ஐஸ்வர்யா முரட்டுத்தனமாக நடந்து வருகிறார். Harathi said…

13 hours ago

பிரான்ஸ் அரசின் அனுமதியுடன் வீட்டில் மிருகக்காட்சி சாலை நடத்தி வரும் நபர்!

வீட்டையே மிருகக்காட்சி சாலையாக மாற்றி வைத்திருக்கிறார் பிரான்ஸில் ஒரு 67 வயது தாத்தா. இந்த தாத்தாவின் வீட்டிற்கு அவர் கூறியது போல அனுமதி இன்றி உள்ளே செல்லக்கூடாதுதான். …

14 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.