காலநிலை மாற்றம் இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை பெரிதும் பாதிக்கும் – உலக வங்கி அதிர்ச்சி தகவல்

0
374
conditions including temperature significant impact living standards people

conditions including temperature significant impact living standards people

உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் வெப்பநிலை மற்றும் மழை உட்பட அனைத்து காலநிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை பெரிதும் பாதிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக வங்கியானது தெற்காசிய ஹாட்ஸ்பாட்ஸ் என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெப்பநிலை உயர்வு மற்றும் பருவக்காலங்களில் ஏற்படும் மாற்றம் வாழ்க்கை தரத்தை பாதிக்குமா என்பதை அறிய எடுக்கப்பட்ட இந்த அறிக்கையில் 2050 ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள பாதி பொதுமக்களின் வாழ்க்கை தரம் குறையும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

பருவநிலை மாறுவதால் விவசாயம் மற்றும் ஆரோக்கியம் போன்றவற்றில் ஏற்படும் பாதிப்பே வாழ்க்கை தரம் குறைவதற்கு காரணம். குறிப்பாக மத்திய, வட மற்றும் வடமேற்கு இந்தியாவில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படும். மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் வாழ்க்கை தரம் 9 சதவீதம் குறையும்.

இந்த மாற்றத்தால் சுமார் 600 மில்லியன் மக்கள் பாதிப்படையலாம். இதனால் தெற்காசியாவில் சீரற்றநிலை மற்றும் வறுமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆய்வறிக்கையின் படி இந்தியாவின் வெப்பநிலை 2050-ம் ஆண்டிற்குள் 1-2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

conditions including temperature significant impact living standards people

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :