கட்சி பேதங்களை மறந்து உழைத்தால் சிறுமி றெஜினாவின் இழப்பே இறுதி படுகொலையாக இருக்கும் – மாணவர் போராட்டத்தில் டக்ளஸ்

0
515
Apart political differences working together harmony duglus devananda

(Apart political differences working together harmony duglus devananda)

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் சமூக நலன்கருதியும் மக்களின் பாதுகாப்பு கருதியும் அனைவரும் ஒன்றுபட்டு உழைப்பதனூடாகவே எமது சமூகத்தில் இன்னொரு றெஜினாவை கொடிய வன்முறைக்கு காவு கொடுக்காது பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிச் சிறுமி றெஜினாவின் மரணத்துக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட மாணவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது மக்களது கலாசாரங்களை சீரழித்துக் கொண்டிருக்கின்ற சமூக சீரழிவுகளை இல்லாதொழிப்பதற்கு மக்களின் ஆதரவும் அவசியம்.

அரசியல் ரீதியாக சொல்லப்படுகிறது இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடக்காது என்றும் இதை தொடர்ந்து நடக்க விடக்கூடாது.

ஆனாலும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

ஆதலால் இவ்வாறான சம்பவங்களை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் இந்த போதை பொருள் பாவனையை நிறுத்த வேண்டும்.

இதில் பொது மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பங்குண்டு. இந்த இரண்டும் ஒன்று சேரும் போதே இலகுவாக தீர்வுகாண முடியும்.

ஏனெனில், இது ஒரு பிரதேசத்துக்கு மட்டுமான பிரச்சினை அல்ல. தமிழர்கள் வாழும் பகுதிகளெங்கும் இது நடைபெறுகின்றது.

இன்று நடந்தேறியுள்ள றெஜினாவின் கொலையே கடைசியானது என எடுத்துக்கொண்டு இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் எங்கும் நடைபெறாது இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அந்த தீர்வுதான் இந்த றெஜினா என்ற குழந்தையின் கொலைக்கு மட்டுமல்லாது இவ்வாறான சம்பவங்களுக்கு நீண்டகால தீர்வாக அமையும்.

நான் இன்று மத்திய அரசின் முகவராகவும் இருக்கவில்லை மாகாண அரசின் முகவராகவும் இருக்கவில்லை.

அவ்வாறு நான் இன்று இருந்திருந்தால் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வுகளைக் காண்பதற்கான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்திருப்பேன்.

அந்தவகையில் கட்சிகள் பேதங்களால் அரசியல் காரணங்களை கொண்டதாக பிரச்சினைகளை அணுகாது சமூக நலன் கருதி அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டால் நிச்சயம் தீர்வுகாண முடியும்.

அந்தவகையில் கட்சி பேதங்களை மறந்து உழைத்தால் சிறுமி றெஜினாவின் இழப்பே இறுதி படுகொலையாக இருக்கும் அதற்காக சகலரும் கட்சி போதங்கள் இன்றி உழைக்கவேண்டும் என்றும் அதிகாரத்திலுள்ளவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

(Apart political differences working together harmony duglus devananda)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites