இயக்குநர் கவுதமன் ஜாமீன் மனு தள்ளுபடி – உயர் நீதிமன்றம்

0
428
dismissed director Gowdhamans case againstt indiatamilnews

dismissed director Gowdhamans case againstt indiatamilnews

ஐ.பி.எல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் காவலர் தாக்கப்பட்ட வழக்கில் இயக்குநர் கவுதமன் ஜாமீன் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தொடர் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம், சென்னையில் ஐ.பி.எல் போட்டியை நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பியது.

சென்னையில் முதல் போட்டி நடைபெறும் நாள் கடும் போராட்டங்கள் நடைபெற்றன. போட்டிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடைபெற்றது.

இதில் இயக்குநர்கள் கவுதமன், பாரதிராஜா, வெற்றிமாறன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில், போலீஸார் தடியடி நடத்தினர். போலீஸார் மீதும் சிலர் தாக்குதல் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 24-ம் தேதி இயக்குநர் கவுதமன் சுமார் 2 மாதங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டார். அவர்மீது, போராட்டத்தின்போது காவலர் செந்தில்குமார் என்பவரைத் தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கவுதமன், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை

நேற்று வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்தது.

dismissed director Gowdhamans case againstt indiatamilnews

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :