பங்களாதேஷில் அசத்தல் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய லஹிரு திரிமான்னே!

0
555
Lahiru Thirimanne batting vs Bangladesh 2018

பங்களாதேஷ் ஏ அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 8 விக்கட்டுகளை இழந்து 449 ஓட்டங்களை குவித்துள்ளது.

இரண்டு அணிகளுக்குமிடையிலான முதல் டெஸ்ட் போட்டி சிட்டக்கொங்கில் நடைபெற்று வருகின்றது.

உபாதையிலிருந்த திமுத் கருணாரத்னவின் தலைமையில் பங்களாதேஷ் சென்றுள்ள இலங்கை ஏ அணி, சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தார்.

அத்துடன் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த இவர் 60 ஓட்டங்களை விளாசினார்.

தொடர்ந்து களமிறங்கிய அனுபவ வீரர் லஹிரு திரிமான்னே 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 168 ஓட்டங்களை விளாசினார்.

தொடர்ந்து சரித் அசலங்க சிறப்பாக துடுப்பெடுத்தாடி 90 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வேகமாக துடுப்பெடுத்தாடிய சம்மு அஷான் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 70 ஓட்டங்களை விளாசினார்.

பங்களாதேஷ் அணிசார்பில் கஹலீட் அஹமட் 4 விக்கட்டுகளையும், அபு ஹய்டர் 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி 2 விக்கட்டுகளை இழந்து 44 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை அணிசார்பில் நிசல தாரக மற்றும் அசலங்க ஆகியோர் தலா ஒரு விக்கட்டினை வீழ்த்தியுள்ளனர்.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Lahiru Thirimanne batting vs Bangladesh 2018, Lahiru Thirimanne batting vs Bangladesh 2018, Lahiru Thirimanne batting vs Bangladesh 2018