4 ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு பயணம்: பிரதமர் மோடியின் பயணச் செலவு ரூ.355 கோடி: ஆர்டிஐயில் அம்பலம்

0
327
leaders including PrimeMinister parliamentary election tamilnews

including criticizing position branch Ministers office abroad

கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி, 52 வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்துக்காக ரூ.355 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று ஆர்டிஐயில் அம்பலமாகியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பீமப்பா காடட்.சமூக ஆர்வலராக வருவதற்கு முன் விவசாயம் செய்துவந்த பீமப்பா, இதுவரை ஏராளமான விஷயங்களை ஆர்டிஐ மூலம் வெளிக்கொண்டுவந்தார். கர்நாடக முதல்வரின் பயணச் செலவு, மஹாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்கள் சொந்தம் கொண்டாடும் ஏழூர் கிராமம் யாருக்கானது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை வெளிக்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம், பயணச் செலவு குறித்து ஆர்டிஐ மூலம் தகவல் கேட்டிருந்தார். முதலில் இந்தத் தகவலை பிரதமர் அலுவலகம் தர மறுத்துவிட்டது. ஆனால், நீதிமன்றத்தில் முறையிடுவேன் என்று கூறியபின் உள்நாட்டு பயணம் குறித்துத் தர இயலாது வெளிநாட்டுப் பயணம் குறித்த தகவலையும் மட்டும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இதில் பிரதமராக மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றதில் இருந்து இதுவரை 41 முறை 52 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளார். மோடியின் வெளிநாட்டுப் பயணத்துக்கு இதுவரை ரூ.355.78 கோடி அரசுக்குச் செலவாகியுள்ளது. ஏறக்குறைய 4 ஆண்டுகளில் 165 நாட்கள் வெளி நாட்டில் தங்கியுள்ளார்.

இதில் அதிகபட்சமாக பிரான்ஸ், ஜெர்மனி, மற்றும் கனடா நாடுகளுக்கு 2015-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி முதல் 15ம் தேதி மோடி சென்றார். இந்தப் பயணத்துக்கு மோடி செல்லும் போது, ரூ.31 கோடியே, 25 லட்சத்து 78 ஆயிரம் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தில் பிரதமர் மோடி 9 நாட்கள் வெளிநாட்டில் இருந்தார்.

குறைந்தபட்சமாகக் கடந்த 2014-ம் ஆண்டு, ஜூன் 14 மற்றும் 15ம் தேதிகளில் பூடான் நாட்டுக்குப் பிரதமர் மோடி சென்றார், அப்போது, அவரின் செலவு குறைந்தபட்சமாக ரூ.2 கோடியே 45 லட்சத்து 27 ஆயிரத்து 465 ஆகியுள்ளது. இது மோடியின் ஒருநாள் செலவாகும்.

இது குறித்து பீமப்பா ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் மோடியின் பயணச் செலவு குறித்து ஆர்டிஐயில் கேட்டிருந்தேன். ஆனால், பிரதமர் அலுவலகம் தரமறுத்துவிட்டது. ஆனால், 2-வதாக முறையீடு செய்யும் போது, வெளிநாட்டுப் பயணம் குறித்த தகவலை அளித்துவிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக உள்நாட்டு பயணச் செலவை தரவில்லை. ஆனால், இந்தச் செலவு கணக்கைப் பார்த்துவிட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

நான் பாதுகாப்புச் செலவுகளை கேட்கவில்லை, பயணச் செலவுதான்கேட்டேன் என்று கூறியும் பிரதமர் அலுவலகம் உள்நாட்டு பயணச் செலவைத் தரவில்லை. இப்போது இதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வெளியிட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

including criticizing position branch Ministers office abroad

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :