அலரி மாளிகையில் 3 மணி நேரம் ஆலோசனை? கூட்டமைப்பினருக்கும் அழைப்பு

0
432
3 hour Discussion Temple Trees Call Tamil National Alliance

வடமாகாண அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டம் அலரி மாளிகையில் நேற்றைய தினம் மூன்று மணி நேரம் இடம்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. (3 hour Discussion Temple Trees Call Tamil National Alliance)

இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான சுவாமிநாதன், ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோரும் முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் அதிகாரிகள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ. சுமந்திரன், சிறிதரன் ஆகியோருடன் யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல், யாழ். செம்மணிப் பகுதியில் 273 ஏக்கர் பரப்பில் மாதிரி நகரத்தை உருவாக்குதல், காங்கேசன்துறை, பரந்தன் ஆகிய இடங்களில் கைத்தொழில் பூங்காக்களை உருவாக்குதல்,

யுத்தத்தினால் அழிந்து போன யாழ். மாநகர சபைக் கட்டடத்தை அதே இடத்தில் அமைத்தல், ஆகியவற்றை செயற்படுத்த இந்தக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு குறித்தும் ஆராயப்பட்டதுடன், விரைவில் மேலும் பல காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

அதிபரால் அண்மையில் 48 பேர் கொண்ட வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான சிறப்புச் செயலணி அமைக்கப்பட்டிருந்தது.

அதில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உள்வாங்கப்படாத நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு, அபிவிருத்தி குறித்து ஆராயக் கூட்டிய சிறப்பு கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

tags :- 3 hour Discussion Temple Trees Call Tamil National Alliance

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites