தடையாக இருக்கும் பதவி : ரவீந்திரவை கைது செய்ய முடியாமல் தடுமாறும் CID

0
433
ravindra wijegunaratne arrest cid confuse

கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திட்டமிட்டுள்ளதாகவும், எனினும், அவரது பதவி நிலை அதற்குத் தடையாக இருப்பதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.(ravindra wijegunaratne arrest cid confuse)

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, இவர் கடற்படைத் தளபதியாக இருந்த போது, நேவி சம்பத் என்ற குற்றச் சந்தேக நபருக்கு, அடைக்கலம் கொடுத்து உதவினார் என்றும், நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல உடந்தையாக இருந்தார் என்றும், குற்றத்தை மறைத்தார் என்றும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, தன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால், பதவியில் இருந்து விலகி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பேன் என்று அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கூறியிருந்தார்.

எனினும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இவருக்கு எதிராக, நீதிமன்றத்தில் 9527ஃ18 இலக்க பி அறிக்கையை தாக்கல் செய்த பின்னரும், அவர் பதவியில் நீடித்துக் கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அதிபர், பிரதமர், சட்டம் ஒழுங்கு அமைச்சர் , பாதுகாப்புச் செயலர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திட்டமிட்டுள்ள போதிலும், அவரது பதவி நிலை அதற்குத் தடையாக உள்ளது.

எனினும், அட்மிரல் விஜேகுணரத்ன விரைவில் தமது பதவிகளை இழக்கும் நிலை ஏற்படும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்த அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

tags :- ravindra wijegunaratne arrest cid confuse

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites