ஜூரம் வந்தவங்க சீக்கிரம் தேற சுள்ளுனு ரசம்.!

0
425
healthy spicy  rasa

(healthy spicy  rasam)

பொதுவாக காய்ச்சல் வந்தவர்கள் நோய் நீங்கி, ஆரோக்கியமான நிலைக்கு வந்தப்பிறகு கொஞ்சம் பலவீனமாக இருப்பார்கள்.  அப்படி நோயிலிருந்து மீண்டவர்கள்  சீக்கிரம் தேற,  இந்த ஸ்பெஷல் ரசத்தை வச்சுக் கொடுங்க.

தேவையான பொருட்கள்;
பயத்தம்பருப்பு – அரை டம்ளர்
நாட்டுத் தக்காளி – 2
பெருங்கயா பொடி – தேவைக்கேற்ப
இஞ்சித்துண்டு – ஒரு அங்குலம்
சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – தேவையான அளவு

செய்முறை ;
அரை டம்ளர் பயத்தம்பருப்பை குழைய வேக வேகவைத்துக்கொள்ளவும்,  நாட்டுத் தக்காளி ரெண்டை முழுசா வேக வைத்து , தோலுரித்து , மிக்ஸியில அரைத்து பயத்தம் பருப்போட சேருங்க. தாராளமா பெருங்காயப் பொடி தூவுங்க.  இதுல, ஒரு அங்குல நீள இஞ்சித் துண்டை தோல் நீக்கி, பொடியா நறுக்கி சேருங்க. ஒரு டேபிள் ஸ்பூன் சீரகத்தை  வெறும்  வாணலியில வறுத்து, பொடிச்சுப் போடுங்க.

பிறகு , கொஞ்சமா தண்ணி விட்டு, விளாவி, இதை அடுப்புல வச்சு சூடு பண்ணுங்க. ருசிக்கு தகுந்து உப்பு விட்டுக்கொல்லவும் .  ரசம் ஒரு கொதி வந்ததும், கால் டம்ளர் தண்ணி விட்டு விளாவி இறக்கிவிடவேண்டும்.

பிறகு , கொஞ்சமா தண்ணிர் விட்டு, விளாவி, இதை அடுப்புல வெச்சு சூடு பண்ணுங்க. ருசிக்கு தகுந்த உப்பு விட்டுக்கொல்லவும் . ரசம் ஒரு கொதி வந்ததும், கால் டம்ளர் தண்ணி விட்டு விளாவி இறக்கிவிடவேண்டும். புளிப்புக்கு ஏற்ற மாதிரி எலுமிச்சைச் சாறு விட்டுக்கொள்ளவும் . ஒரு டீஸ்பூன் நெய்யில சீரகம் தாளிச்சு கொட்டவும்.

இப்பொழுது சுவையான ரசம் தயார்.

tags;-healthy spicy  rasam

<<TAMIL NEWS GROUP SITES>>

உடலுக்கு ஆரோக்கியமான குதிரைவாலி தேங்காய் பால் புலாவ்

மிருதுவான ரசகுல்லா செய்யலாம் வாங்க!

சுவையான மாம்பழ சட்னி

<TAMIL NEWS GROUP SITES>>

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/

http://tamilfood.com/

http:technotamil.com

http://tamilgossip.com/

http:cinemaulagam.com

http://sothidam.com/

http://tamilsportsnews.com/