வவுனியா பிரதேச செயலகத்தில் பதற்றம் : இனத்தை இழிவுபடுத்தி துண்டுப்பிரசுரம்

0
501
tension situation Vavuniya Divisional Secretariat

வவுனியாவில் நீண்டகாலமாக வாழும் மலையக மக்களை இழிவுபடுத்தி உணர்வுகளைத் தூண்டும் வகையில் துண்டுப்பிரசுரம் வெளியிட்டுள்ள இளைஞரொருவர் இன்று காலை வவுனியா பிரதேச செயலகத்திற்குள் வைத்து பொதுமக்களால் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.(tension situation Vavuniya Divisional Secretariat)

இந்த சம்பவத்தால் பிரதேச செயலகத்தில் சிறிது நேரம் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு அதிகமான பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வவுனியா சிந்தாமணி ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியம் வவுனியா மாவட்டத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்றினை மேற்கொண்டிருந்தது.

இதன்போது, வவுனியாவில் பரந்தளவில் மலையக மக்களாகிய தாம் வாழ்ந்து வருகின்ற போதும் சிலரால் இழிவுபடுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி மாவட்ட செயலகத்தை அடைந்த நிலையில் உதவி மாவட்ட செயலளரிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியா பிரதேச செலயகத்திற்குள் சென்ற போராட்டக்காரர்கள் பிரதேச செயலாளரிடமும் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.

மலையக மக்களை இழிவுபடுத்தி துண்டுப்பிரசுரம் வெளியிட்டதாக கூறப்படும் நபர் அங்கு வைத்து போராட்டக்காரர்களால் இனங்காணப்பட்ட போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பிரதேச செயலகத்தில் அசாதாரண சூழ்நிலை உருவாகியதையடுத்து சந்தேகநபர் பிரதேச செயலகத்திற்குள் ஒளிந்து கொண்டதால் போராட்டக்காரர்கள் பிரதேச செயலக வாயிலை மறித்து அவரை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கோரியுள்ளனர்.

சம்பவ இடத்தில் கடமையிலிருந்த பொலிஸார் குறித்த நபரையும், போராட்டம் மேற்கொண்ட தலைமையினரையும் அழைத்து பேச்சுக்கள் நடத்திய பின்னர் சந்தேகநபரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து போராட்டம் மேற்கொண்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags :- tension situation Vavuniya Divisional Secretariat

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites