ஆளுநர் ஆய்வு விவகாரம்! – சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

0
530
governor's study case - opposition walks assembly

சட்டப்பேரவையில் ஆளுநர் குறித்து பேச சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.governor’s study case – opposition walks assembly

தமிழக சட்டப்பேரவை 10 விடுமுறைக்கு பின்னர் இன்று கூடியது. அதில் ஆளுநரின் ஆய்வு குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசத் தொடங்கினார். இதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து திமுக, காங்கிரஸ், இந்திய முஸ்லீம் லிக் ஆகிய கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சட்டப்பேரவையிலிருந்து வெளியேறிய ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது : ஆளுநர் வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடுகிறார். மாநில சுயாட்சிக்கு எதிராக மாவட்டங்களில் ஆய்வு நடத்தி வருகிறார்.

இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்து விட்டார். 1995ல் ஜெயலலிதா ஆட்சியில் ஆளுநர் சென்னா ரெட்டிக்கு எதிராக விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றேன். அது பழைய கதை என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.

ஆளுநர் ஆய்வு குறித்து போராட்டம் நடத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என்பது மிரட்டல் தொனியில் ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் மாநில சுயாட்சிக்காக 7 ஆண்டுகள் இல்லை ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க தயார். மாநில சுயாட்சிக்காக எந்த தியாகம் செய்யவும் தயார் தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு தொடரும் பட்சத்தில் திமுக கருப்பு கொடி போராட்டம் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கவில்லை மக்களின் உணர்வை புரிந்து திட்டத்தை செயல் படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :