பரபரப்பான ஆட்டம் சமனிலை – நாக் அவுட் பிரிவில் நுழைய ஜப்பான் – செனகல் பிரயத்தனம்

0
690
fifa world cup japan face senegal today s crucial match

(fifa world cup japan face senegal today s crucial match)

ஃபிபா உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு 7 அணிகள் முன்னேறியுள்ளன.

இன்று நடந்த ஆட்டத்தில் ஜப்பான் மற்றும் செனகல் 2-2 என டிரா செய்து நாக் அவுட் வாய்ப்பை தக்க வைத்துள்ளன.

ஒவ்வொரு அணியும் இரண்டாவது ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.

ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே, சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டி பிரிவில் இருந்து குரேஷியா, எப் பிரிவில் இருந்து மெக்சிகோ, ஜி பிரிவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து ஆகியவை ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இந்த நிலையில் எச் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் ஜப்பான், செனகல் மோதின —- பிரிவு எச் ஜப்பான் – செனகல் 2 – 2 —- எச் பிரிவில் இதுவரை…

* ஜப்பான் 2-1 என கொலம்பியாவை வென்றது * செனகல் 2-1 என போலந்தை வென்றது

* ஜப்பான் 2-2 என செனகலுடன் டிரா செய்தது எச் பிரிவில் ஜப்பான் மற்றும் செனகல் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன.

போலந்து, கொலம்பியா புள்ளி ஏதும் பெறவில்லை. —– எச் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் ஜப்பான் 2-1 என கொலம்பியாவை வென்றது.

இரண்டாவது ஆட்டத்தில் செனகல் 2-1 என போலந்தை வென்றது. ஜப்பான் மற்றும் செனகல் தலா 3 புள்ளிகளுடன் உள்ளன.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நாக் அவுட் சுற்று முன்னேறும் என்ற நிலையில் இரு அணிகளும் விளையாடின. இன்றைய ஆட்டத்தில் துவக்கம் முதலே ஜப்பான் ஆக்ரோஷமான ஆட்டத்தில் ஈடுபட்டது.

ஆனால் 11 வது நிமிடத்தில் சாடியோ மானே கோலடிக்க செனகல் 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

34 வது நிமிடத்தில் ஜப்பானின் டகாஷி இனூய் கோலடித்து சமநிலையை உருவாக்கினார். முதல் பாதியின் இறுதியில் 1-1 என சமநிலையில் இரு அணிகளும் இருந்தன.

71 வது நிமிடத்தில் செனகலின் மூசா வேக் கோலடிக்க 2-1 என முன்னிலை பெற்றது. 78 வது நிமிடத்தில் ஜப்பானின் ஹோண்டா கோலடித்து மீண்டும் சமநிலையை உருவாக்கினார்.

இறுதியில் ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது. அதையடுத்து இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றன.

தற்போது தலா 4 புள்ளிகளுடன் ஜப்பான் மற்றும் செனகல் உள்ளன.

அடுத்து நடைபெறும் ஆட்டத்தில் போலந்து, கொலம்பியா மோதுகின்றன.

அதில் தோல்வியடையும் அணி பிரிவு சுற்றுடன் வெளியேறும். நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற மூன்று அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும்.

செய்தி மூலம் – tamil.mykhel.com

(fifa world cup japan face senegal today s crucial match)

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites