இதைப் பார்த்தால் இனி கடைகளில் கொத்து சாப்பிடவே மாட்டீர்கள்!

0
120

அம்பலாந்தொட்டை, மல்பெத்தாவ பிரதேசத்தில், ஒரு உணவகத்திலிருந்து உணவுக்காக கொள்வனவு செய்த கோழிக் கொத்தில், உயிரிழந்த தவளையொன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Frog in Kothu

உணவுக்காக கொத்தை கொள்வனவு செய்த பெண் அதில் உயிரிழந்த தவளையொன்று காணப்பட்டதை அவதானித்துள்ளார். உடனே அம்பலாந்தொட்டை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.பீ.மாலக சில்வாவிடம் இந்த கொத்து ரொட்டியை ஒப்படைத்து புகார் செய்துள்ளார்.

இங்த புகாரை அடுத்து அம்பலாந்தொட்டை பொது சுகாதார அதிகாரி குறிப்பிட்ட உணவகத்துக்கு சென்று இந்த சம்பவம் தொடர்ப்பாக அந்த உணவகத்தின் உரிமையாளரிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளார்.

தவளை அடங்கிய கொத்து ரொட்டியை பொது சுகாதார அதிகாரி கைபற்றியுள்ளார்.

சந்தேக நபரான உணவகத்தின் உறிமையாளரான பெண்ணை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

சிக்கன் கொத்துவுடன் தவளையின் உடம்பின் பாகங்கள் சிதைந்து காணப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி மாலக சில்வா தெரிவித்தார்.