12 வயதில் கிராண்ட் மாஸ்டர் – சென்னை சிறுவன் சாதனை!

0
331
12 year chess grand master

12 year chess grand master)

12 வயதில் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சென்னை சிறுவன் சாதனை படைத்துள்ளார்.

சென்னையை சேர்ந்த 12 வயது சிறுவன் பிரகனாநந்தா. இவர் செஸ் போட்டிகளில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். 12 வயது 10 மாதங்கள் 14 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் என்ற சிறப்பை பிரகனாநந்தா பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் உக்ரைனின் செர்ஜே கர்ஜாகின் என்ற சிறுவன், 12 வயது 7 மாதங்களில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை எட்டியதே சாதனையாக உள்ளது.

மேலும் , இவருக்கு அடுத்தப்படியாக உலகின் இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமை பிரகனாநந்தா பெற்றுள்ளார்.

இத்தாலியில் நடைபெற்று வரும் க்ரெடின் ஓபன் ( gredine open ) என்ற சர்வதேச செஸ் போட்டியின் எட்டாவது சுற்றில் வெற்றியை ஈட்டியதன் மூலம், கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை இவர் பெற்றுள்ளார்.

12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற பிரகனாநந்தாவிற்கு செஸ் சாம்பியன் விஸ்வநாதன் உள்ளிட்ட செஸ் ஜாம்பவான்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

tags;-12 year chess grand master

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :