தேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த இரண்டு தேரர்கள் மீது தீவிர விசாரணை

0
515
tamilnews Three accused ordered released Colombo High Court

(tamilnews Three accused ordered released Colombo High Court)

மாளிகாவத்தை, போதிராஜாராம விகாரையின் தலைமை பிக்கு ஊவதென்னே சுமன தேரர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து மூன்று பேரை கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிபந்தனையற்ற வகையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் மாளிகாவத்தை, போதிராஜாராம விகாரையில் இருந்து துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பில் விகாராதிபதி உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

வழக்கில் பி.ராஜபாலன், எஸ்.தமிழ்செல்வம் மற்றும் சந்தனம் சுப்ரமணியம் ஆகிய மூன்று பிரதிவாதிகளும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்னவினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை எடுத்துச் சென்றமை, அவர்களின் உடமையில் வைத்திருந்ததற்கான சாட்சிகள் இல்லை என்று நீதிபதி கூறியுள்ளார்.

இந்த வழக்கில் ஏனைய பிரதிவாதிகளான ஊவதென்னே சுமன தேரர் மற்றும் உவமஹவலதென்னே சுமேத தேரர் ஆகியோருக்கு எதிராக வழக்கை தொடர்ந்து நடத்திச் செல்வதற்கு தீர்மானித்த நீதிபதி, அடுத்த விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

(tamilnews Three accused ordered released Colombo High Court)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites