ஐ.நா மனித உரிமை பேரவையிலிருந்து விலகினாலும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்

0
403
athul keshap meet Lankan delights united nation human right council

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகினாலும் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படுமென அமெரிக்க உறுதியளித்துள்ளது. athul keshap meet Lankan delights united nation human right council

இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைவர்களை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் இந்த உறுதிமொழியை வழங்கியிருப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இதனை அறிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிராக செயற்படுவதால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்க விலகியது.

அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கும் நோக்கிலேயே இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கும் என்ற உறுதிமொழியை அவர் இதன்போது வழங்கியுள்ளார்.

அனைத்து இலங்கையர்கள் மத்தியிலும் நல்லிணக்கம், சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்கா வழங்கியிருக்கும் அர்ப்பணிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு 30கீழ்1 பிரேரணை மற்றும் 2017ஆம் ஆண்டு 34 கீழ் 1 பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்தது.

இந்தப் பிரேரணைகளுக்கு அமெரிக்காவும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.

இந்தப் பிரேரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான விடயங்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்குமென அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேசத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுப்பதானது இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதுடன், ஏனைய நாடுகளுடனான உறவுகளுக்கும் பலமானதாக அமையும் என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

tags :- athul keshap meet Lankan delights united nation human right council

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites