ஈரானில் தவிக்கும் 21 மீனவர்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

0
385
fishermen suffering indiatamilnews tamilnadonews tamilnews

fishermen suffering indiatamilnews tamilnadonews tamilnews

ஈரானில் தவித்துவரும் 21 தமிழக மீனவர்கள் நாடு திரும்பத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஈரான் நாட்டில் ஒப்பந்த அடிப்படையில் மீ்ன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 21 பேர், தொடர்ந்து பணியாற்ற முடியாமலும், நாடு திரும்ப முடியாமலும் தவித்து வரும் அவல நிலையை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

ஈரானைச் சேர்ந்த முகமது ஷாலா மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான 3 படகுகளில் கடந்த 6 மாதங்களாக ஒப்பந்த மீனவர்களாக 21 பேரும் பணியாற்றி வருகின்றனர். இதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர், நெல்லையைச் சேர்ந்த 7 பேர், தூத்துக்குடியைச் சேர்ந்த 6 பேர் உள்ளனர்.

சமீபகாலமாக ஈரான் மீன்பிடி உரிமையாளர்கள் ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களுக்கு உரிய பங்குத் தொகையை அளிக்கவில்லை. எனவே, அந்த மீனவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு பணத்தை பெற்று அனுப்பவும், நாடு திரும்பவும் போராடி வருகின்றனர்.

ஊதியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை கைவிட்ட மீனவர்கள், தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்பும்படி உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், உரிமையாளர்கள் அதை நிராகரித்துவிட்டனர்.

மீனவர்களின் பாஸ்போர்ட்டை தங்கள் வசம் வைத்துள்ள ஈரான் மீன்பிடி உரிமையாளர்கள், அவர்களை தொடர்ந்து தொழில் செய்யவோ, இந்தியாவுக்கு திரும்பவோ அனுமதிக்கவில்லை. அந்த மீனவர்களை வசிப்பிடத்தில் இருந்தும் வெளியேற்றிவிட்டனர். இதனால் அவர்கள் உணவு, வசிப்பிடம், பாதுகாப்பு இல்லாமல் சாலையில் சுற்றித் திரிகின்றனர்.

எனவே, ஈரானில் இருந்து அவர்கள் உடனடியாக நாடு திரும்பத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி, ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும். மேலும் மீனவர்களுக்கு கிடைக்க வேண் டிய நிலுவைத் தொகையை பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு, மீனவர்கள் விரைவில் தங்கள் குடும்பத்தினர், உறவினர்களுடன் இணைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட் டுள்ளது.

fishermen suffering indiatamilnews tamilnadonews tamilnews

More Tamil News

போதும் என்னை விட்டுவிடுங்கள்! – நடிகை கஸ்தூரி வீடியோ!

கந்தக அமிலத்தை அகற்றினால் மீண்டும் திறக்கப்படுமா? – ஸ்டெர்லைட் ஆலை!

பா.ஜ.க அரசால் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை – காரணம் என்ன?

கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து ஓட்டுனர்!

​​​15 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் பரிசு – மிசோரமில் அறிவிப்பு!

Tamil News Group websites :

Technotamil.com

Tamilhealth.com

Sothidam.com

Cinemaulagam.com

Ulagam.com

Tamilgossip.com