வெளியேறும் நிலையில் ஆர்ஜென்டினா அபாரமாக கோல்களை விலாசிய குரேஷியா!

0
679
Currents advanced next round defeating Argentina 3-0 match today

(Currents advanced next round defeating Argentina 3-0 match today)

21 வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்று ஆட்டங்களில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இதில் டி பிரிவில் இன்று நடந்த போட்டியில் ஆர்ஜென்டினாவை 3-0 என வென்று அடுத்தச் சுற்றுக்கு குரேஷியா முன்னேறியது.

மெஸ்ஸியின் மந்திரம் பலிக்காத நிலையில், பிரிவு சுற்றிலேயே வெளியேறும் நிலையில் அர்ஜென்டினா உள்ளது. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் இடம்பெற்று வருகின்றன.

பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன.

போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

அதன்படி ஒவ்வொரு அணியும் ஒரு ஆட்டத்தை விளையாடியுள்ளன.

டி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் குரேஷியா 3-0 என அர்ஜென்டினாவை வென்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது.

பிரிவு சுற்றிலேயே வெளியேறும் நிலையில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா உள்ளது.

பிரிவு டி குரேஷியா – அர்ஜென்டினா 3 – 0

டி பிரிவில் இதுவரை அர்ஜென்டினா 1-1 என ஐஸ்லாந்துடன் சமநிலை செய்தது.

குரேஷியா 2-0 என நைஜீரியாவை வென்றது * குரேஷியா 3 – 0 என அர்ஜென்டினாவை வென்றது.

டி பிரிவின் புள்ளிப் பட்டியலில் குரேஷியா 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

அர்ஜென்டினா, ஐஸ்லாந்து தலா ஒரு புள்ளியுடன் உள்ளன. நைஜீரியா புள்ளி ஏதும் பெறவில்லை.

இந்த உலகக் கோப்பை போட்டியில் பல ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள் அரங்கேறியுள்ளன.

நடப்பு சாம்பியன் ஜெர்மனி தோல்வி என பல அதிர்ச்சிகள் இருந்தாலும், அர்ஜென்டினாவின் டாப் ஸ்டார் லியோனல் மெஸ்ஸியின் மேஜிக் நடக்காததே ரசிகர்களை அதிக அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில் மெஸ்ஸியின் மேஜிக் புஸ்ஸானதுடன் பிரிவு சுற்றிலேயே வெளியேறும் நிலையில் அர்ஜென்டினா உள்ளது.

இதுவரை நடந்துள்ள 23 ஆட்டங்களில் உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்பட்ட ஜெர்மனி, பிரேசில் உள்ளிட்ட அணிகள் ஏமாற்றத்தை அளித்துள்ளன.

அந்த வரிசையில் உலகப் புகழ்பெற்ற லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவும் இணைந்துள்ளது.

டி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்திலேயே ஐஸ்லாந்துடன் 1-1 என டிரா செய்து அர்ஜென்டினா ஏமாற்றியது.

இந்தப் பிரிவில் அடுத்து நடந்த ஆட்டத்தில் குரேஷியா 2-0 என நைஜீரியாவை வென்றது. இன்று நடந்த ஆட்டத்தில் குரேஷியாவுடன் அர்ஜென்டினா மோதியது.

அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவது யார் என்பதை முடிவு செய்யும் இந்த ஆட்டத்திலும் அர்ஜென்டினா சொதப்பியது.

ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் ரேபிக், 80வது நிமிடத்தில் மோட்ரிக், 91வது நிமிடத்தில் ரேகிடிக் என, குரேஷியா தொடர்ந்து மூன்று கோல்களை அடித்து, அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தது.

இதன் மூலம் 3-0 என்ற கோல் கணக்கில் வென்று நாக்-அவுட் சுற்றுக்கு குரேஷியா முன்னேறியது. முன்னாள் உலகக் கோப்பை சாம்பியனான அர்ஜென்டினா கடைசியாக பங்கேற்ற 12 உலகக் கோப்பைகளில் 11ல் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

2002 ல் மட்டுமே பிரிவு சுற்றில் வெளியேறியது. கடைசியாக விளையாடிய 15 பிரிவு சுற்று ஆட்டங்களில் 12ல் வென்றுள்ளது. ஒன்றில் மட்டுமே தோல்வி அடைந்திருந்தது.

கடைசியாக நடந்த மூன்று உலகக் கோப்பைகளிலும் பிரிவுச் சுற்றில் அர்ஜென்டினா முதலிடத்தில் இருந்தது. ஆனால், ஒரு முன்னாள் சாம்பியன் அணிக்கு உண்டான ஆட்டத்தை அர்ஜென்டினா இந்த உலகக் கோப்பையில் வெளிப்படுத்தவில்லை.

அதிலும் கால்பந்தில் மேஜிக் நிகழ்த்தக் கூடியவரான மெஸ்ஸி, இதுவரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

டி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் நைஜீரியாவுடன் ஐஸ்லாந்து மோதுகிறது.

அடுத்து வரும் 26 ம் திகதி நைஜீரியாவுடன் அர்ஜென்டினா மோதுகிறது. அந்த ஆட்டத்தில் அதிக கோல்கள் வித்தியாசத்தில் வென்றால், அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு அர்ஜென்டினாவுக்கு உள்ளது.

இந்த நிலையில் இரண்டு வெற்றிகளைப் பெற்ற குரேஷியா நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஏற்கனவே ஏ பிரிவில் இருந்து ரஷ்யா, உருகுவே மற்றும் சி பிரிவில் இருந்து பிரான்ஸ் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

(Currents advanced next round defeating Argentina 3-0 match today)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை