நடைமுறைக்கு வரும் ஐரோப்பிய ஒன்றிய வரிகள்!

0
351
American goods UN tax effect

டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக கொள்கைக்கு எதிராக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகள் இன்று(ஜூன் 22) முதல் அமுலுக்கு வருகின்றன. American goods UN tax effect

2.8 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீல ஜீன்ஸ், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் போர்போன் விஸ்கி போன்ற பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் எஃகு பொருட்கள் மீது 25% மற்றும் அலுமினியப் பொருட்கள் மீது 10% என்று வரிவிதிப்பதாக கடந்த மார்ச் டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

முன்னதாக, இந்த முடிவினை ஜங்கர் கடுமையாக விமர்சித்திருந்தார். இது தொடர்பாக வியாழக்கிழமையன்று பேசிய அவர், “இந்த வரி விதிப்பு தர்க்கத்திற்கு எதிராக உள்ளது. எங்களின் பதில் நடவடிக்கை தெளிவாக ஆனால் சரியான அளவில் இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

டப்ளின் பாராளுமன்றத்தில் பேசிய அவர், “நாம் இதனை சமன் செய்யவும், ஐரோப்பிய ஒன்றியத்தை பாதுகாக்கவும் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்வோம்” என்று கூறினார்.

புகையிலை, ஹார்லி டேவிட்ஸன், மோட்டார் சைக்கிள்கள், கிரான்பெரிகள் மற்றும் பீனட் பட்டர் போன்ற அமெரிக்கப் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், காலணிகள், சில துணிமணிகள் மற்றும் வாஷிங் மெஷின்கள் போன்ற பொருட்களுக்கு 50% வரியை ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையேயான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

tags :- American goods UN tax effect

Source by- BBC

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**