அக்கரைப்பற்றில் பதற்றம் ; தமிழர் – முஸ்லிம்களிடையே கைகலப்பு

0
625
Tension Akkaraipattu Tamil Muslim Clashes

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பகுதியிலுள்ள தமிழர்கள் மத்தியில் சற்று பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். (Tension Akkaraipattu Tamil Muslim Clashes)

ஆலையடி வேம்பு தவிசாளர் பேரின்பராஜாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், இன்றைய தினம் பாடசாலைகளில் மாணவர்களின் வருகையும் குறைந்தளவே காணப்படுவதாகவும் அரச அலுவலர்களின் வருகையும் வழக்கத்தை விட குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழர்கள் அதிகளவில் வாழும் பிரதேசங்களில் அனைத்து வியாபார நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் முஸ்லிம்கள் சிலரால் போலி ஆவணங்களுடன் சென்று அத்துமீறி காணி அபகரிப்பு செய்ய முற்பட்டதை தொடர்ந்து, கைகலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, ஆலையடி வேம்பு தவிசாளர் பேரின்பராஜா நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த அதேவேளை, தவிசாளர் பேரின்பராஜா விசாரணைக்கு அழைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பெரியகளப்பு பகுதியில் தமது காணி என முஸ்லிம் நபர் ஒருவர் களப்பு நிலத்தை அத்துமீறி வேலி அடைத்து ஆக்கிரமிக்க முற்பட்டனர்.

இதன் போது மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு நில ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து, களப்பில் நாட்டப்பட்ட வேலிகளை பிடுங்கி எறிந்தனர்.

இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நில ஆக்கிரமிப்பாளர் தனது காணியை எல்லையிட்டு வேலியடைக்க முற்பட்டபோது தம்மை தாக்கியதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து, பொலிஸார் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் சுதந்திரகட்சி, ஐக்கிய தேசிய கட்சிகளைச் சேர்ந்த இரு பெண் உறுப்பினர்களை கைது செய்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

tags :- Tension Akkaraipattu Tamil Muslim Clashes

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை