கற்பனை செய்ய முடியாதளவுக்கு பாரிய குற்றங்களை இலங்கை செய்துள்ளது

0
869
tamilnews srilankan ltte war crimes american congress chris smith

(tamilnews srilankan ltte war crimes american congress chris smith)

இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட அரச படைகளும், விடுதலைப்புலிகளும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு யுத்த குற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றங்கள் தொடர்பில் நம்பகத் தன்மையான சாட்சிகளுடன் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் ஸ்மித் தலைமையில், உலகலாவிய ஆரோக்கியம், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் தொடர்பான வெளிவிவகார அமைச்சின் உப குழு இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஆராய்ந்துள்ளது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆரம்ப உரையை ஆற்றிய ஸ்மித் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் “இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் நிறைவடைந்து விட்டன.

25 வருட கால யுத்தம் காரணமாக 100,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பும் கற்பனை செய்து பார்க்க முடியாத யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டன என்பதற்கு நம்பகத்தன்மையான சாட்சிகளுடன் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

“பாதிக்கப்பட்ட பலருக்கு நீதி என்பது கண்ணுக்கு தென்படாத ஒரு விடயமாகவே உள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் மனித உரிமைகள் குறித்து கவனம் செலுத்தும் நீதிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என கருதிய போதிலும் தற்போதைய அரசாங்கம் போதியளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லை.” எனவும் ஸ்மித் குற்றம்சாட்டினார்.

நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தி தேர்தலில் போட்டியிட்ட போதிலும் சமூகங்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது.

மைத்திரிபால சிறிசேன ஒருசில விடயங்களை நிறைவேற்றினார் எனினும் இனக்குழுக்களுக்கு இடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன.” எனவும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

(tamilnews srilankan ltte war crimes american congress chris smith)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை