பிரபஞ்ச உலக அழகிப் போட்டிக்கு தயாராகும் தமிழ்நாட்டு நங்கை!

0
960

2018 ம் ஆண்டிற்கான பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் நடந்தது. 29 மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் இதில் பங்கேற்று பல்வேறு கட்ட போட்டிகளில் தகுதி பெற்றனர். (Miss India Anukeerthy Next Step Miss Universe Competition)

நேற்றிரவு நடைபெற்ற வண்ணமயமான இறுதிச் சுற்றுப் போட்டியில், கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட மானுஷி சில்லர், நடிகைகள் கரீனா கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மாதுரி தீக்ஷித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில், சென்னையை சேர்ந்த 19 வயது கல்லுாரி மாணவி அனுக்ரீத்தி வாஸ் என்பவர் மிஸ் இந்தியா 2018 பட்டம் வென்றார். சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ., பிரெஞ்ச் பயிலும் அனுக்ரீத்திக்கு மானுஷி சில்லர் மகுடம் சூட்டினார்.ஹரியானாவை சேர்ந்த மீனாட்சி சவுத்ரி, ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரேயா ராவ் ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திற்கு தேர்வுசெய்யப்பட்டனர். இந்நிலையில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அணு இவ்வருடம் நடைபெறவிருக்கும் பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Tag: Miss India Anukeerthy Next Step Miss Universe Competition