இன்ஸ்டாகிராம் IGTV App அறிமுகம்

0
587
instagram igtv appdownload ios android

(instagram igtv appdownload ios android)
இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐஜிடிவி (IGTV) என அழைக்கப்படும் புதிய செயலியில் நீண்ட நேரம் ஓடக்கூடிய வீடியோக்களை பார்க்க முடியும்.

வழக்கமான இன்ஸ்டாகிராம் செயலியில் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் ஓடும் வீடியோக்கள் சிறிய திரையில் பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு புதிய செயலி முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும். ஐஜிடிவி செயலியில் வீடியோக்கள் செங்குத்தாகவும், திரை முழுக்க ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐஜிடிவி செயலியை திறந்ததும் பெரிய வீடியோக்களை பார்க்க முடியும், இதனால் இன்ஸ்டாவில் நீங்கள் பின்தொடர்வோரின் வீடியோக்களை பார்க்க பிரத்யேகமாக தேட வேண்டிய அவசியம் கிடையாது. இதே திரையில் இருந்த படி மேல்புறமாக ஸ்வைப் செய்தால் மேலும் புதிய தரவு வழங்குவோரின் வீடியோக்களையும் பார்க்க முடியும்.

உலகம் முழுக்க சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஐஜிடிவி ஆப் Android மற்றும் IOS இயங்குதளங்களின் பிளே ஸ்டோர்களில் கிடைக்கிறது.

instagram igtv appdownload ios androidgence

Tamil News