ஞானசார தேரரை விடுவிக்க கோரி உண்ணாவிரதப் போராட்டம்

0
411
hunger strike demanding release Gnanasara Thera

சிறைச்சாலையில் உள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. (hunger strike demanding release Gnanasara Thera)

மகா சங்கத்தினர் கொழும்பு புறக்கோட்டை விகாரைக்கு முன்னால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் கை வைத்துள்ளது ஞானசார தேரர் மீதல்ல, முழு மகா சங்கத்தினர் மீது என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு அதிகளவிலான தேரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், பல்வேறு கோரிக்கை அடங்கிய பதாதைகளை தாங்கியும் இருந்தனர்.

காணாமல் போன ஊடகவியலாளர் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவை திட்டி, அச்சுறுத்திய வழக்கில், பொது பலசேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொட அத்தே ஞானசார, குற்றவாளி என ஹோமாகம நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குற்றவாளியாக இனங்காணப்பட்டு, ஞானசார தேரர் தற்பொழுது சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்ற நிலையில், அவரை விடுவிக்க கோரி இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tags :- hunger strike demanding release Gnanasara Thera

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை