ரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்!!!

0
387
Portugal vs morocco fifa world cup 2018

பிபா உலகக்கிண்ண தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் போர்த்துகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற பி குழுவுக்கான முதல் போட்டியில் போர்த்துகல் அணி மொராக்கோ அணியை எதிர்கொண்டு விளையாடியது.

போட்டியின் ஆரம்பத்திலேயே முதலாவது கோலை போர்த்துகல் அணி பதிவுசெய்தது.

நான்காவது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பபை சிறப்பாக பயன்படுத்திய கிரிஸ்டியானோ ரொனால்டோ அற்புதமான கோலொன்றை அடித்து முன்னைிலைப்படுத்தினார்.

தொடர்ந்த முதற்பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோலடிக்கும் வாய்ப்புகளை தவறவிட்ட நிலையில், போர்த்துகல் அணி முதற்பாதியில் 1-0 என முன்னிலை வகித்தது.

பின்னர் ஆரம்பித்த இரண்டாவது பாதியிலும், முதற்பாதியை போன்று வாய்ப்புகள் பல தவரவிடப்பட்டன. இறுதிநேரம் வரை மொராக்கோ அணி கோலடிக்காத நிலையில், போர்த்துகல் அணி ரொனால்டோவின் ஒரு கோலின் உதவியுடன் வெற்றியை தக்கவைத்தது.

இம்முறை உலகக்கிண்ணத்தில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள ரொனால்டோ 4 கோல்களை அடித்துள்ளார். முதல் போட்டியில் மூன்று கோல்களையும், இன்றைய போட்டியில் ஒரு கோலையும் அடித்துள்ளார்.

இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் அதி கோல்களை அடித்த ஐரோப்பிய வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுக்கொண்டுள்ளார். இவர் இன்றுடன் மொத்தமாக 85 சர்வதேச கோல்களை அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்றைய போட்டியில் வெற்றிபெற்ற போர்த்துகல் அணி பி குழுவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>

<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>

Portugal vs morocco fifa world cup 2018, Portugal vs morocco fifa world cup 2018, Portugal vs morocco fifa world cup 2018