‘கட்டிப் புடி! கட்டிப் புடிடா’ மும்தாஜை கண்டு நடுங்கும் பிக்பாஸ் ஆண்கள்!

0
682

பலர் எதிர்பார்ப்பின் மத்தியில் ஆரம்பித்திருக்கும் பிக் பாஸ் சீசன் இரண்டு தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. (Bigg Boss Season Two Contestant Mumtaj Fight)

நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் போட்டியாளர்கள், அவர்களின் நடத்தைகள் என போட்டி நாளுக்கு நாள் சூடேறி வரும் நிலையில், ஒரு காலத்தில் ஆண்களின் கனவுக்கு கன்னியாக வலம் வந்த கவர்ச்சிப் புயல் மும்தாஜ் நிகழ்ச்சியில் காட்டும் அலப்பறைகள் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை.

நேற்றைய தினம் பிக் பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்திருந்தார். அதாவது, மூன்று கார்ட்கள் வீட்டின் படுக்கையறையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை எடுத்து கமெரா முன் காட்டுபவர் தான் அந்த கிழமைக்கான தலைவர் பொறுப்புக்கு போட்டியிட முடியும்.

இந்நிலையில் பிக் பாஸின் உத்தரவு வந்தவுடன் அனைவரும் படுக்கையறைக்கு சென்று ஆர்வமுடன் தேடிக் கொண்டிருக்கையில் மும்தாஜ் திடீரென ‘ஆண்கள் யாரும் பெண்களின் ஆடைகளைத் தொட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யும் பாணியில் கூறியிருந்தார்.

இதைக் கேட்ட சென்ராயன் ‘அப்படி எல்லாம் முடியாது. டாஸ்க் என்று வந்தால் நாம் செய்தே தான் ஆக வேண்டும் என்று கூற மும்தாஜ் ‘இஃ பாஸ் பெண்களின் உள்ளாடைகள் முதற் கொண்டு அனைத்தும் இருப்பதால் இது சரியான செயல் அல்ல என்று மீண்டும் உரத்துக்கு கூறியிருந்தார்.

இதனால் சிறிது நேரம் அங்கு வாக்குவாதம் நிகழ்ந்து பின்னர் ஒருவாறு
ஓய்ந்தது.

Tag: Bigg Boss Season Two Contestant Mumtaj Fight