Categories: Head LineINDIA

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றுமொரு தலைவர் கொலை!

பாஜகவின் கொலைக்கும்பல் 2018 ஜூன் 18 அன்று இரவு திரிபுரா வடக்கு மாவட்டம், பனிசகர் உட்கோட்டத்தில் தபஸ் சுத்ரதார் என்னும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றுமொரு தலைவரைக் கொன்றுள்ளது.another marxist communist party leader killed

தோழர் தபஸ் சுத்ரதார், பனிசகர் உட்கோட்டத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பனிசகர் உட்கோட்டக் கமிட்டி உறுப்பினர், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர், பஞ்சாயத்து சமிதி முன்னாள் உறுப்பினர், உத்தர் பத்மாபில் கிராமப் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் ஆவார். 19ஆம் தேதி அதிகாலைப் பொழுதில் கிராமத்தார்கள் அவர் கொலை செய்யப்பட்டுக்கிடப்பதைப் பார்த்து அடையாளம் காட்டினார்கள். முந்தைய இரவு ஒரு திருமணநிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டுத் திரும்புகையில் அவரது வீட்டின் அருகே அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது கழுத்து, கூர்மையான குத்துவாளால் குத்திக் கிழிக்கப்பட்டிருக்கிறது. தோழர் சுத்ரதார் கிராமத்தில் எவரிடமும் சொந்தப் பகைமை எதுவும் கொண்டிருக்கவில்லை. எனவே இக்கொலை நன்கு திட்டமிட்ட அரசியல் கொலை என்பதும், இதனை பாஜகவின் கொலைக் கும்பல்தான் செய்திருக்கிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

இக்கொலையையும் சேர்த்து மாநிலத்தில் பாஜக-ஐபிஎப்டி-யின் கடந்த 100 நாள் ஆட்சிக் காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். (1) ராகேஷ் தார் (பைகுரா), (2) அஜந்ரா ரியாங் (செச்சுவா கிராமம், கோமதி மாவட்டம்) மற்றும் (3) பிரதீப் தேவ் வர்மா (திரிபுரா மேற்கு மாவட்டம், பாஷ் கொபாரா பரா) ஆகிய மூவரும் மற்றதோழர்களாவார்கள்.

ஜனநாயக உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுகின்றன :

கடந்த 100 நாட்களில் பாஜக-ஐபிஎப்டி கூட்டணி, மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் மீது தங்களுடைய பாசிஸ்ட் தாக்குதல்களை உக்கிரப்படுத்தி இருக்கின்றன.

அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் அரசாங்கம் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி மற்றும் தொழிற்சங்க அலுவலகங்களை இடித்துத் தரைமட்டமாக்கி யிருக்கின்றனர். இவற்றில் கணிசமான எண்ணிக்கையிலான அலுவலகங்கள் 30/40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவைகளாகும். இதேபோன்று மேலும் பல அலுவலகங்களை இடிப்பதற்கு அறிவிப்புகள் அனுப்பி இருக்கிறது.

பாஜக-ஐபிஎப்டி கூட்டணி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுத்து இயங்கிக் கொண்டிருக்கும் உள்ளாட்சி அமைப்புகளையும் பறித்திட வேண்டும் என்று வெறியுடன் இருந்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் 90 சதவீதத்திற்கும் மேலானவை இடது முன்னணியால் நடத்தப்பட்டு வருவதால், ஆளும் கட்சி குண்டர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை, பாஜகவில் சேர வேண்டும், இல்லையேல் உள்ளாட்சி அமைப்பில் தாங்கள் வகிக்கும் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு ஓடிவிட வேண்டும் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் கட்டாயப்படுத்தி, மிரட்டி, சில இடங்களில் தாக்குதல் நடத்தி அவர்களிடமிருந்து ராஜினாமா கடிதங்களைப் பெற்றிருக்கிறார்கள். ஆட்சியாளர்களின் அரவணைப்பு இல்லாமல் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் பாஜக குண்டர்கள் ஈடுபடுவதற்கு சாத்தியம் கிடையாது.

இடதுசாரிகள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன :

மாநிலத்தில் கட்சி மற்றும் வெகுஜன ஸ்தாபனங்களின் அலுவலகங்கள் மற்றும் இடது முன்னணி ஆதரவாளர்களின் வீடுகள் ஆகியவற்றை காவிக் கூட்டத்தார் இடித்துத்தரைமட்டமாக்குவது அல்லது ஆக்கிரமித்துக் கொள்வது என்பவை தொடர்கின்றன. ஒருசிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் பணம் பறித்திடும் அக்கிரமும் நடந்துகொண்டிருக்கிறது.

இரத்த தான முகாம்களின் மீதான தாக்குதல் :

சென்ற ஜூன் 18 அன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள் உதய்பூர் நகரத்தில் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் இரத்த தான முகாம் நடத்தினார்கள். ஒரு பெண் உட்பட 50 இளைஞர்கள் இரத்த தானம் கொடுப்பதற்காகத் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தார்கள். சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் நன்கொடையாகத் தரப்படும் இரத்தத்தைப் பெற்றுச் செல்வதற்காக உரிய ஏற்பாடுகளுடன் வந்துவிட்டார்கள். அவர்கள் வந்து, சுமார் மூன்றில் ஒரு பகுதி நபர்களிடம் இரத்தத்தையும் பெற்றுவிட்டார்கள். அந்த சமயத்தில் பாஜக குண்டர்கள் முகாமுக்குள் புகுந்து, இரத்தம் எடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட கருவிகளை அடித்து நொறுக்கியதுடன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பெயரில் எப்படி இரத்தம் சேகரிக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளையும் மிரட்டிவிட்டு, இரத்தம் எடுப்பதை நிறுத்தச் சொல்லி, நிறுத்தியும் விட்டார்கள். இக்கொடுமையை நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கை யிலேயே செய்திருக்கிறார்கள்.

உண்மையில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் போதிய அளவிற்கு இரத்தம் இல்லாமல் பற்றாக்குறை நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்காக அனைத்து இளைஞர் அமைப்புகளும் இரத்தம் கொடுக்க முன்வரவேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதிப் ராய் பர்மன் அறைகூவல் விடுத்திருந்தார். மாணிக் சர்க்கார் இரத்த தானம் கொடுத்தபோது அவர் அதை வெகுவாகப் பாராட்டியுமிருந்தார். அமைச்சரின் அறைகூவலுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் செவிமடுத்ததைத்தொடர்ந்துதான் இவ்வாறு இரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சரின் அறைகூவலுக்கு செவிமடுத்து நடைபெற்ற இரத்த தான முகாமில் ரகளை செய்த ரவுடிகளைத் தடுத்திட காவல்துறை வழக்கம்போல இப்போதும் முன்வரவில்லை.

சட்டத்தை மீறுபவர்களின் கைகளில் சட்டம் – ஒழுங்கு :

மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கைத் தற்போது பாஜக குண்டர்கள் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தில் கொலைகள், பெண்கள் மீதான கொடுமைகள், திருட்டு, போதைப் பொருள்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பல இடங்களில் இவற்றுக்கெதிராக தாக்கல்செய்யப்படும் புகார்களில் பாஜகவினரின் பெயர்கள் இருப்பதாக சந்தேகப்பட்டால், அவற்றைப் பதிவு செய்திட காவல்துறையினர் மறுக்கிறார்கள். அப்படியே மீறி பதிவு செய்தால், தொடர் விசாரணை எதுவும் கிடையாது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளும்போது பாஜக குண்டர்கள் பதறுகிறார்கள். ஜூன் 7 அன்று சாந்திர்பசார் சந்தைப் பகுதிக்கு சிபிஎம், திரிபுரா தெற்கு மாவட்டக்குழு உறுப்பினர் அசுதோஷ் தேவ்நாத் வந்தபோது, அவரை பாஜக குண்டர்கள் தாக்கியுள்ளார்கள். ஜூன் 4 அன்று இந்திய மாணவர் சங்கத்தின் தலைவியான நிலஞ்சனா ராய் அவரது இல்லத்திலிருந்தபோதே பாஜக மகளிர் பிரிவுக் கூட்டத்தினரால் தாக்கப்பட்டார். அன்றைய தினமே சோனமுரா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர் நித்தியானந்தா பர்மான், மெலாகர் நகரில் தாக்கப்பட்டார். எம்எல்ஏ சுதான் தாஸ் தாக்குதல்களுக்கு ஆளான இடதுசாரிக்கட்சி ஆதரவாளர்களின் இல்லங்களுக்கு சென்றபோது, தாக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு மிகவும் மோசமாக நடந்துகொண்டுள்ள கயவர்களில் எவரொருவரையும் காவல்துறையினர் இதுவரை கைதுசெய்திடவில்லை.

சிறுவணிகர்கள் வெளியேற்றப்படுதல் :

அகர்தலாவில் பாஜக குண்டர்கள் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளின் அலுவலகங்களை இடித்துத் தரைமட்டமாக்கியபோது, நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவணிகர்களின் கடைகளையும் இடித்துத்தரை மட்டமாக்கிவிட்டார்கள். உனாகோடி மாவட்டத்தில் பெசார்த்தால் மற்றும் குமார்காட் என்னும் ஊர்களில் 803 சிறு வணிகர்களுக்கு கடைகளைக் காலி செய்திடுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அரசின் இந்தச் செயல்கள் அவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இடது முன்னணி ஆட்சி செய்த காலத்தில் தவிர்க்கமுடியாதநிலையில் எவருடைய இடமாவது காலி செய்யப்பட வேண்டுமானால் அவருக்கு உரிய நிவாரணமும் மாற்று இடமும் அளிக்கப்படும். ஆனால் அதுமாதிரி எதையும் இப்போதைய அரசு மேற்கொள்ளவில்லை.

அரசுப் பணிகளுக்கு ஆள் எடுப்பு :

பாஜக-ஐபிஎப்டி கூட்டணி அரசாங்கம் ‘டி’ பிரிவு உட்பட அரசின் அனைத்துப்பிரிவுகளுக்கும் தேர்வின் அடிப்படையில் ஆள் எடுத்திட முடிவு செய்திருக்கிறது. இத்தேர்வுகளில் தெரிவுசெய்யப்படும் நபர்கள் பின்னர் நேர்காணல் ஒன்றிற்கு ஆஜராக வேண்டும். இவ்வாறு நடைபெறும் நேர்காணலில் நகர்ப்புறங்களில் வசிக்கம் வசதிபடைத்தவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இடதுமுன்னணி ஆட்சி செய்த காலத்தில் பணியிடங்களுக்கு ஆள் எடுக்கப்படும்போது அந்தந்த உட்கோட்டங்களில் விண்ணப்பிக்கப்படும் நபர்களின் விகிதாசாரத்திற்கேற்ப ஆட்கள் எடுக்கப்பட்டார்கள். இப்போதைய அரசு அந்தக் கொள்கையைக் கைவிட்டுவிட்டது. இவர்களின் புதிய கொள்கையின்படி சராசரியாக தகுதி பெற்றுள்ள நபர்கள் அரசுப் பணிகளில் இனி சேர்ந்திட முடியாது.

இடது முன்னணியைச் சேர்ந்த ஏழைகள் ஓரங்கட்டப்படுகிறார்கள் :

மகாத்மாகாந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் ஒருசில ஊராட்சி ஒன்றியங்களில், 10/12 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. அதுவும் பாஜக ஆதரவு பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இடது முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்றால் 2/3 நாட்களுக்கு மேல் வேலை தரப்படுவதில்லை. வேலைகளை மேற்பார்வையிடும் பணியை இடது முன்னணி ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளும் கிராமக் கமிட்டிகளும் மேற்கொண்டுவந்தன. இப்போது அது கைவிடப்பட்டுவிட்டது.

கடந்த நூறு நாட்களில் மாநிலத்தில் இருமுறை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அந்த சமயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்வதில் நிர்வாகம் முழுமையாகச் சீர்குலைந்தது. நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படுகையில் இடதுசாரியைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கு நிவாரணம் எதுவும் அளித்திடாமல், தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கே நிவாரணம் அளிக்கப்பட்டது. அரசின் இத்தகைய ஓரவஞ்சனையான போக்கை மக்கள் வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

பொது விநியோக முறை முடக்கம் :

பல ரேஷன் கடைகள் மூடப்பட்டுவிட்டன. ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் பலரால் உணவுப் பொருள்களை வாங்க முடியவில்லை. ரேஷன் அட்டைதாரர்களில் பலர் வயதானவர்கள். அவர்களால் கடைகளுக்கு செல்லமுடியவில்லை. எனவே ரேஷன் அட்டைதாரர்களில் பெரும்பகுதியினர் உணவுப் பொருள்களை வாங்கமுடியாமல் கைவிடப்பட்டுவிட்டனர். பல ரேஷன் கடைகளில் தரமற்ற உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

அச்சத்தின் பிடியில் மூத்த அரசு ஊழியர்கள் :

திரிபுரா அரசாங்கம் 50 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களை செயல்பாட்டின் அடிப்படையில் பணியில் வைத்திருப்பதா அல்லது வீட்டிற்கு அனுப்பிவிடலாமா என்று ஆய்வு செய்துகொண்டிருக்கிறது. 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியரின் பணி அதிருப்திகரமானதாக இருப்பின், அவர்களுக்கு ஓய்வுபெறுவதற்கான நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக அரசாங்கத்தை விமர்சிக்கும் அரசு ஊழியர் சங்கத்திற்கு ஆதரவாக இருப்பவர்களைப் பழிவாங்கிட அரசுக்கு வாய்ப்புகள் உண்டு. இது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரிய அளவில் கசப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

போராட்டப்பாதையில் மக்கள் :

அரசாங்கத்தின் மிரட்டல்களுக்கெல்லாம் கிஞ்சிற்றும் அஞ்சிடாமல், மே தினத்தையும் காரல் மார்க்ஸ் 200ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் மக்கள் பல இடங்களில் வெகு விமர்சையாகக் கொண்டாடி இருக்கிறார்கள். ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் மறுக்கப்படுவதைக் கண்டித்து மாநிலத்தின் பல பகுதிகளிலும் இடது முன்னணி மற்றும் சிஐடியு சார்பாக இயக்கங்கள் நடந்துள்ளன. அகில இந்திய விவசாயிகள் சங்கம், மக்கள் அதிகார அமைப்பு (ஜன அதிகார் மஞ்ச்). இளைஞர் அமைப்புகள் எதிர்ப்பு இயக்கங்களை நடத்தின. இந்திய மாணவர் சங்க தலைவி நிலஞ்சனா ராய் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகள் வீரஞ்செறிந்த பேரணியை நடத்தின.

உட் கோட்ட அளவில் கட்சித் தலைவர்கள் உட் கோட்ட நிர்வாக அதிகாரிகளையும், மாவட்ட ஆட்சியர்களையும் சந்தித்து மாநிலத்தில் அமைதி மீளவும், பாஜக குண்டர்களின் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு உடனடியாக வேலையும் உணவும் வழங்கவும் கோரி இருக்கிறார்கள்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Sakthi Raj

Share
Published by
Sakthi Raj
Tags: another marxist communist party leader killed

Recent Posts

மன அழுத்தத்தை போக்க சைக்காலஜி மருத்துவரின் சிகிச்சை: அதிர்ச்சியில் மக்கள் செய்த செயல்

உக்ரைனில் சைக்காலஜி மருத்துவர் ஒருவர் தனது மருத்துவத்தின் ஒரு பகுதியாக நோயாளிகளை சவப்பெட்டியில் வைத்து மண்ணில் புதைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். Psychotherapy’s treatment stress act people shock…

2 hours ago

ஜெயலலிதாவாக மாறும் நித்யா மேனன்….!! டைட்டில் அறிவிப்பு…!!

இயக்குனர் பிரியதர்ஷினி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்கவுள்ளார். மிஷ்கினின் உதவி இயக்குனர் தான் இந்த பிரியதர்ஷினி. இந்த படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்…

2 hours ago

மர்மமான முறையில் காணாமல் போன கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர்!

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக விடுதியில் தங்கியிருந்த , கிழக்கு பல்கலைக்கழகத்தின், திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் ஒருவர் காணாமல் போயுள்ளாரென, நிலாவெளி மற்றும் துறைமுக பொலிஸ்…

3 hours ago

கருணாஸ் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது; கமல்ஹாசன்

கருணாஸ் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது, ஆனால் ஜாதிகளை மறக்கும் இந்த நேரத்தில் அதனை விளையாட்டாகக் கூட பயன்படுத்தக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி…

3 hours ago

ஜோதிகா குறும்புத்தனமாக நடித்த “காற்றின் மொழி” டீசர்

செக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், மொழி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ராதா மோகனின் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் காற்றின் மொழி.…

3 hours ago

தமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்!

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரையான காலப் பகுதியில் தடுப்புகாவலில் வைத்து சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட…

3 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.