நஞ்சு நிறைந்த எறும்புகளால் ஆபத்துடன் வாழும் பிரதேச மக்கள்

0
477
Poisonous ants People living danger

ஊவா பரணகம மல்வத்தகம பிரதேசத்தில் பரவிவரும் ஒரு வகையிலான நஞ்சு நிறைந்த எறும்பு வகையினால், இந்தப் பிரதேச மக்களின் வாழ்வாதாரமான மிளகு மற்றும் பாக்கு உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். (Poisonous ants People living danger)

இந்த எறும்புகளை ‘கொடெய்யன்’ எனவும் இந்த எறும்புகள் கட்டும் கூடுகளுக்கு ‘கொடெயி காய்கள்’ என மக்கள் பெயரிட்டுள்ளனர்.

அத்துடன், இவை மரங்களில் கூடுகளை கட்டி வாழ்ந்து வருவதாகவும் இவை கடித்தவுடன் சுமார் ஒரு மணித்தியாலம் வரை வேதனையுடன், தோல் அரிப்பு மற்றும் எரியும் உணர்வு ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் அங்கும் இங்குமாக குறைவாகக் காணப்பட்ட கொடெயி காய்கள் தற்போது எல்லா மரங்களிலும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எறும்புகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகியுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த எறும்பு வகைகளை கூடிய சீக்கிரம் கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

tags :- Poisonous ants People living danger

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites