யாழ். கோட்டைக்குள் இராணுவத்தை அமர்த்த முடியாது; ஆனோல்ட்

0
507
army can not placed inside Jaffna Fort

யாழ்ப்பாணத்திற்குள்ளோ அல்லது கோட்டைப் பகுதிக்குள்ளோ இராணுவத்தை அமர்த்த முடியாது என யாழ். மாநகர சபை மேயர் இ. ஆனோல்ட் குறிப்பிட்டுள்ளார். (army can not placed inside Jaffna Fort)

பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டேரிஸ்க்கும் யாழ். மாநகர சபை மேயருக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, யாழ். மேயர் பிரித்தானிய தூதுவரிடம் இவ்வாறு கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடிதாகவும் தமது அபிவிருத்திக்கு பிரித்தானியாவின் பங்களிப்பை கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை யாழ்ப்பாணம் நகரில் உள்ள கோட்டைப் பகுதியில் அமர்த்துவது தொடர்பில் எமது நிலைப்பாடு என்ன எனத் தூதுவர் வினவினார்.

யாழ்ப்பான நகரத்துக்குள்ளே அல்லது யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியிலோ இராணுவத்தை அனுமதிக்க முடியாது. இராணுவத்தை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றே கோரிக்கை விடுத்தோம்.

நான் வடக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்து தற்போது யாழ்ப்பான மாநகர முதலவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதால் மாகாண சபையின் அனுபவங்கள் தொடர்பிலும் பகிர்ந்து கொண்டோம்.

இதில் வடக்கு மாகாண சபை பல விடயங்களைச் செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். நான் உறுப்பினராக இருந்தவன் என்ற அடிப்படையில் அதனை ஏற்றுக் கொண்டதாகவும் யாழ். மாநகர சபை மேயர் குறிப்பிட்டுள்ளார்.

tags :- army can not placed inside Jaffna Fort

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites