மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு நற்செய்தி..!

0
572
tags :- arjuna ranatunga three wheel bike

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் புதிய எரிபொருள் வகை, விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.(arjuna ranatunga three wheel bike)

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிதாக 13 பொறியியலாளர்களை உத்தியோகப்பூர்வமாக இணைத்து கொள்ளும் நிகழ்வின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில், பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க, கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நீல் ஜயசேகர மற்றும் ஏனைய உயர் அதிகாரிகள் பங்குபற்றியிருந்தனர்.

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அங்கு கருத்து தெரிவிக்கையில்,
´கடந்த காலத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய தேவையிருந்தது. நாம் அதை விரும்பிச் செய்யவில்லை. ஆனால் சில நெருக்கடி நிலையை தவிர்ப்பதற்காகவே எமது விருப்பதற்திற்கு மாறாக செயற்பட வேண்டியிருந்தது.

இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரிய நிலைதொடர்பாகவும் நாம் அறிந்திருந்தோம்.

தற்போது நாம் பொதுமக்களுக்கு எவ்வாறு வேறு வழிகளில் நிவாரணங்களை வழங்கலாம் என ஆலோசித்து வருகின்றோம்.

அதற்கமைய பொருளாதார ரீதியாக நிவாரணம் வழங்கும் முகமாக முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்காக எரிபொருள் சந்தையில் புதிய பெற்றோல் வகையை அறிமுகப்படுத்தவுள்ளோம்.

இது தொடர்பாக பல பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். இந்த முயற்சி வெற்றியளிக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

இந்நிகழ்வில் பங்குபற்றிய பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவிக்கையில்,

´இன்று நியமனம் பெறும் நீங்கள் அனைவரும் ஒன்றினைந்து வேலைசெய்வது நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நிறுவனத்தில். உலகத்தில் பல நாடுகளில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் இல்லை. ஆனால் எமது நாட்டில் உள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் 50 வருடங்கள் பழமையானது.

இந்த சுத்திகரிப்பு நிலையத்தை தொடர்ந்து நடாத்திச்செல்வதற்கு காரணம் எம்மிடம் உள்ள சிறந்த திறமையான பொறியியலாளர்களினாலேயே. புனரமைப்பு பணிகளுக்காக மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நாங்கள் எண்ணெய் சுத்திகரிப்பு பணிகளை நிறுத்துவோம். இதனை கடந்த காலத்தில் வெற்றிகரமாக செய்து முடித்தோம். எதிர்காலத்தில் உங்களது யோசனைகளுடனும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடனும் இந்த நிறுவனத்தை அபிவிருத்தி செய்யவுள்ளோம் இதற்கு உங்களது ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்´ என்றார்.

tags :- arjuna ranatunga three wheel bike

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites