சந்திமால் உண்மையில் பந்தை சேதப்படுத்தினாரா? : வெளியாகிய முக்கிய தகவல்!!!

0
514
West Indies vs Sri Lanka Ball Tampering issue

இலங்கை அணியின் தலைவர் சந்திமால், மே.தீவுகளுக்கதெிரான பந்தை சேதப்படுத்த முயன்றிருப்பதாக ஐசிசி குற்றச்சாட்டியுள்ளது.

இலங்கை மற்றும் மே.தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது இலங்கை அணியின் வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டிருந்தது.

எனினும் இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது, வீரர்களிடம் அறிவிக்காத நடுவர்கள். அடுத்த நாள் போட்டி ஆரம்பிக்க 10 நிமிடங்கள் இருக்கும் போது, பந்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்காக மே.தீவுகளுக்கு மேலதிகமாக 5 ஓட்டங்களையும் வழங்குவதாக அறிவித்தனர்.

அத்துடன் வேறு பந்தொன்றை துடுப்பாட்ட வீரர்களை தெரிவுசெய்யுமாறும் நடுவர்கள் கூறியிருந்தனர்.

எனினும் குறித்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த இலங்கை வீரர்கள், மூன்றாவது நாள் ஆட்டத்திற்கு மைதானத்துக்கு வரவில்லை. நடுவர்கள் மற்றும் துடுப்பாட்ட வீரர்கள் மைதானத்துக்கு வருகைத் தந்த போதிலும், இலங்கை அணி வீரர்கள் உடைமாற்றும் அறையில், போட்டி மத்தியஸ்தர் ஜவகல் ஸ்ரீநாத்துடன் உரையாடிக்கொண்டிருந்தனர்.

குற்றச்சாட்டை மறுத்த இலங்கை வீரர்கள் பின்னர் மைதானத்துக்கு வருகைத்தந்த போதிலும், சுமார் இரண்டு மணி நேரம் வரை போட்டியில் விளையாடாமல், குற்றத்துக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்தனர்.

எனினும் பின்னர் இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரிகளுடன் தொலைபேசியில் சந்திமால், ஹதுருசிங்க மற்றும் அணியின் முகாமையளார் அசங்க குருசிங்க ஆகியோர் கலந்துரையாடிய பின்னர் சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் போட்டி ஆரம்பமானது.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபை,

“இதுவொரு தேவையற்ற குற்றச்சாட்டு. எமது அணி வீரர்கள் எந்தவித தேவையற்ற சம்பவத்திலும் ஈடுபடவில்லை. இதனால் வீரர்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கிரிக்கெட் சபை மேற்கொள்ளும். இதேவேளை இந்த போட்டியில் இலங்கை அணி விளையாடும் என்றாலும், குற்றச்சாட்டுக்கெதிரான போராட்டம் அமைதியாக இடம்பெறும்” எனவும் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் சனிக்கிழமை போட்டி நிறைவுபெற்ற பின்னர் வீடியோ ஆதாரங்களை ஆராய்ந்த நடுவர் குழாம் மற்றும் போட்டி மத்தியஸ்தர்கள், தினேஷ் சந்திமால் பந்தை சேதப்படுத்தவில்லை என தெரிவித்திருந்தாலும், பந்தை சேதப்படுத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இதுதொடர்பில் குறிப்பிட்டுள்ள ஐசிசி,

“போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் இறுதி சீசனில், சந்திமால் இனிப்பு வகையொன்றை தனது காற்சட்டை பையிலிருந்து எடுத்து, வாயில் இட்டு சாப்பிட்டுள்ளார். எனினும் பந்தில் குறித்த இனிப்பு வகை தடவப்படுவதற்கு முன்னர் நடுவர்கள் குறித்த விடயத்தினை கண்டுபிடித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

இதனால் சந்திமாலின் மீது பந்தை சேதப்படுத்த முயன்றதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. எனினும் இது இரண்டாம் நிலை குற்றம் என்பதால், சந்திமாலுக்கு போட்டிக்கட்டணத்தில் 100 அல்லது 50 சதவீம் அபராதம் விதிக்கப்படலாம். இல்லையென்றால் அவருக்கு குற்றப்புள்ளிகளை வழங்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இதுதொடர்பான முழுமையான விசாரணை அறிக்கைகள் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பின்னர்தான் அறிவிக்கப்படும் என ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது.

<<Tamil News Group websites>>

West Indies vs Sri Lanka Ball Tampering issue, West Indies vs Sri Lanka Ball Tampering issue, West Indies vs Sri Lanka Ball Tampering issue, West Indies vs Sri Lanka Ball Tampering issue