பிரேசிலின் வெற்றி வாய்ப்பை தட்டிப்பறித்த சுவிஸ்லாந்து!!!

0
641
brazil vs switzerland match draw world cup 2018

பிபா உதைப்பந்தாட்ட தொ்டரில் இன்று அதிகாலை நடைபெற்ற பிரேசில் மற்றும் சுவிஸ்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி சமனிலையில் முடிவடைந்தது.

இந்த போட்டியின் ஆரம்பத்தில் ஆதிக்கத்தை பிரேசில் அணி செலுத்தியது. போட்டியின் 20வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பிலி்ப் கவுடின்ஹோ அற்புதமான கோலை அடித்து அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற முதற்பாதியில் இரண்டு அணிகளும் மேலதிக கோல்களை பெறமுடியாத நிலையில், முதற்பாதியில் பிரேசில் அணி 1-0 என முன்னிலை வகித்தது.

பின்னர் ஆரம்பித்த இரண்டாவது பாதியில் சுவிஸ்லாந்து வீரர்கள் பிரேசில் அணியின் வீரர்களுக்கு கடும் போட்டியை கொடுத்தனர்.

இதன்படி இரண்டாவது பாதியில் தங்களது வாய்ப்புகளை பயன்படுத்திய சுவிஸ்லாந்து அணி ஸ்டீவன் ஷுவரின் உதவியுடன் தங்களது முதல் கோலை பதிவுசெய்தது.

இதன் அடிப்படையில் சுவிஸ்லாந்து அணி போட்டியை 1-1 என சமப்படுத்தியது.

போட்டியின் பிற்பகுதியில் இரண்டு அணிகளும் எடுத்த முயற்சிகள் பலனின்றி முடிவுபெற, போட்டி 1-1 என சமனிலையில் முடிவுக்கு வந்தது.

இரண்டு அணிகளுக்கும் இந்த போட்டியில் புள்ளிகள் பகிரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>

brazil vs switzerland match draw world cup 2018, brazil vs switzerland match draw world cup 2018